எவர்கிரீன் பாடல்கள் கொண்ட தென்றலே என்னைத் தொடு… ஹீரோயின் இப்போ என்ன செய்றார் தெரியுமா?

மோகன் படத்தில் பாடல்கள் என்றாலே எல்லாமே சூப்பர்ஹிட்டுகளாகத் தான் இருக்கும். அந்த வகையில் அவர் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் படம் தென்றலே என்னைத் தொடு. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஜெயஸ்ரீ நடித்திருந்தார். இந்தப்…

jayashree

மோகன் படத்தில் பாடல்கள் என்றாலே எல்லாமே சூப்பர்ஹிட்டுகளாகத் தான் இருக்கும். அந்த வகையில் அவர் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் படம் தென்றலே என்னைத் தொடு. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஜெயஸ்ரீ நடித்திருந்தார். இந்தப் படத்தின் இசை இளையராஜா.

பாடல்கள் எல்லாமே தேனாமிர்தம். தென்றல் வந்து என்னைத் தொடு, கண்மணி நீ வரக் காத்திருந்தேன் ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் இந்தப் படத்தில்தான் உள்ளன. அந்தக் காலத்தில் வானொலிகளில் தினமும் தவறாமல் இடம்பெறும் பாடல் இதுவாகத்தான் இருக்கும்.

jayashree1
jayashree1

80ஸ் குட்டீஸ்களைக் கேட்டால் தெரியும். அந்த வகையில் 1986ல் வெளியான இந்தப் படம் வெள்ளி விழா கொண்டாடியது. தென்றல் வந்து என்னைத் தொடும் பாடலில் ஜெயஸ்ரீயின் அழகு கொள்ளை அழகு. இவர் ஒரு சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலோ என்னவோ நடிப்பிலும் வெளுத்து வாங்கினார். முதல் படத்திலேயே இந்த அளவு அற்புதமான நடிப்பா என ரசிகர்கள் வியந்து விட்டனர்.

ஜெயஸ்ரீ பூர்வீக சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது பாட்டி பிரபல பாடகி எஸ்.ஜெயலட்சுமி. இவரது தாத்தா எஸ்.பாலசந்தர். இசை, தயாரிப்பு என முக்கிய இடத்தில் இருந்தார்.

80ஸின் கனவுக்கன்னியாக ஜெயஸ்ரீ இருந்தார். இவரது முதல் படம் தென்றலே என்னைத் தொடு. அதன் வெற்றியால் மனிதனின் மறுபக்கம், விடிஞ்சா கல்யாணம், திருமதி ஒரு வெகுமதி, ஆனந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.இந்த லிஸ்ட்ல பல படங்கள் வெற்றிதான். இப்போது ஐடி கம்பெனியில் சுறுசுறுப்பாக பணிபுரிந்து வருகிறார். இவர் எந்தளவு சிறந்த நடிகை என்று 80ஸ் குட்டீஸ்களைக் கேட்டால் தெரியும்.