எம்ஜிஆருக்கு அதிர்ஷ்டம்… உலகம் சுற்றும் வாலிபன் ஜெயிக்க அதுதான் காரணமா? எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க ரசிகாஸ்..!

By Sankar Velu

Published:

மக்கள் திலகம், புரட்சித் திலகம் என்றெல்லாம் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் எம்ஜிஆர். அவர் தன்னோட படங்களில் எல்லாமே ரசிகர்களைக் கவரும் வகையில் வருமாறு பார்த்துக் கொள்வார். அவர் ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்தவர்.

அது மட்டுமல்லாமல் சினிமாவில் உள்ள அனைத்து விஷயங்களையும் விரல் நுனியில் தெரிந்து வைத்துள்ளார். அதனால் தான் அவரால் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை இயக்கி மாபெரும் வெற்றிப்படமாகத் தர முடிந்தது. ஆனால் இங்கு ஒரு ரசிகர் அவரைத் தவறாகப் புரிந்து கொண்டு இப்படி ஒரு கேள்வி கேட்டுள்ளார். வாங்க என்னன்னு பார்க்கலாம்.

பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் நேயர் ஒருவர் இப்படி கேள்வி கேட்டுள்ளார். தொழில்நுட்பமே இல்லாத அந்தக் காலகட்டத்துல எம்ஜிஆரால எப்படி உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக எல்லா நாடுகளுக்கும் போய் படமாக்க முடிந்தது. இது அவருடைய அதிர்ஷ்டமா? அல்லது கடின உழைப்பா என கேள்வி கேட்டு இருந்தார். அதற்கு சித்ரா லட்சுமணன் அளித்த பதில் இதுதான்…

உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கும், தொழில்நுட்பத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக சொல்ல முடியாது. பொதுவாக நம்ம நாட்டிலே படப்பிடிப்பு நடக்கும். எம்ஜிஆர் ஒரு மாறுதலுக்காக ஜப்பானிலே படப்பிடிப்பை நடத்தினார்.

USV
USV

ஒருபக்கம் அவரது நிர்வாகியான ஆர்.எம்.வீரப்பன் மிகப்பெரிய அளவிலே ஒத்துழைப்புத் தந்தார் என்றால் இன்னொரு பக்கம் ஆனந்த விகடன் மணியன் அங்கே படப்பிடிப்பு நடத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் பார்த்துக் கொண்டார். இதை எல்லாம் தாண்டி உலகம் சுற்றும் வாலிபன் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது என்றால் அதற்குக் காரணம் எம்ஜிஆரின் கடின உழைப்பு.

அவரைப் பொருத்த வரைக்கும் அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல. மிகச்சிறந்த டெக்னீஷியன் என்பது திரை உலகில் உள்ள எல்லோரும் அறிந்த விஷயம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1973ல் எம்ஜிஆர் நடித்து தயாரித்து இயக்கிய படம் உலகம் சுற்றும் வாலிபன். மஞ்சுளா, லதா, சந்திரலேகா, நம்பியார், மனோகர், அசோகனன், நாகேஷ், தேங்காய் சீனிவாசன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு இசை அமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். பாடல்கள் எல்லாமே சூப்பர் டூப்பர்ஹிட். அவள் ஒரு நவரச, பன்சாயி, லில்லி மலருக்கு, நிலவு ஒரு பெண்ணாகி, ஓ மை டார்லிங், பச்சைக்கிளி, சிரித்து வாழ வேண்டும், தங்கத் தோணியிலே, உலகம் உலகம், வெற்றியை நாளை ஆகிய பாடல்கள் இந்தப் படத்தில் தான் இடம்பெற்றுள்ளன.

இந்தப் படத்திற்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால் வால் போஸ்டரே ஒட்டாமல் இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அப்போது திமுகவில் இருந்து எம்ஜிஆர் விலகியதால் ஆளும் கட்சியாக இருந்த திமுக படத்தைத் தடுக்க நினைத்து விளம்பரத்துக்கு வரியை ஏற்றியதாம். அதனால் விளம்பரமே இல்லாமல் ஜெயித்த படம் இதுதான்.

மேலும் உங்களுக்காக...