சோதிக்காதீங்க எங்கள.. கோட் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தால் கடுப்பான விஜய் ரசிகர்கள்.. என்ன நடந்தது?..

Published:

இதுக்கு மேல எங்களை சோதிக்காதீங்க என தற்போது விஜய் ரசிகர்கள் புலம்பும் அளவுக்கு சில விஷயங்கள் அரங்கேறி உள்ளது. நடிகர் விஜய் திரைப்படங்கள் என்றாலே அது வெளியாவதற்கு முன்னால் அப்டேட்கள் வந்து கொண்டே இருக்கும். விஜய் படத்தை எடுப்பது எந்த தயாரிப்பு நிறுவனமாக இருந்தாலும் அவர்கள் படத்தின் ரிலீஸ் வரை அப்டேட்டை கொடுப்பதில் தவறுவதே கிடையாது.

இதனால் விஜய் படத்தின் முடிவுகள் என்ன என்பதை விட அந்த படத்திற்கான அப்டேட் எத்தனை நாட்கள் இடைவெளியில் வருகிறது என்பது பற்றியும் எந்த தகவலும் இல்லாமல் கொஞ்சம் நாட்கள் இருந்தாலே ரசிகர்கள் படம் தொடர்பான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் செய்யத் தொடங்கி விடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு மத்தியில் நடிகர் விஜய் அரசியல் பயணத்தை விரைவில் தொடங்க உள்ளதால் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்துள்ள கோட் மற்றும் இன்னொரு படத்துடன் சினிமா பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனால் கோட் மற்றும் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட்டுகள் மற்றும் ரிலீஸ் என என்ன நடந்தாலும் அதனை மிகப்பெரிய அளவில் கொண்டாடி நல்ல ஒரு ஃபேர்வெல்லை விஜய்க்கு கொடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதற்கு மத்தியில் யுவன் சங்கர் ராஜா இசையில் கோட் படத்திலிருந்து இதுவரை வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பது தான் உண்மை. இதனால் கோட் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் சற்று குறைவாக இருந்து வருவதால் படத்தின் டிரைலர் ரிலீசானால் தான் நிச்சயம் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாட தயாராவார்கள் என்பதும் தெரிகிறது.

அதேபோல கோட் படத்தின் டிரைலரும் ஆகஸ்ட் 15 அல்லது 19ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இது பற்றி உறுதியான தகவல்கள் எதுவும் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இன்னும் வெளிவரவில்லை. மேலும் கோட் படத்தின் டிரைலர் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் கருத்துக்களை கேட்க தொடங்க, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இது தொடர்பாக ஒரு பதிவை நேற்று (ஆகஸ்ட் 12) வெளியிட்டிருந்தார்.

அதில், “நாங்கள் உங்களுக்காக அற்புதமான ட்ரைலரை உருவாக்கி வருகிறோம். இதனால் கொஞ்சம் அமைதியாக இருந்து இரண்டு நாட்களை எங்களுக்காக கொடுங்கள். நாளை சிறப்பான ஒரு அப்டேட்டை கொடுக்கிறோம்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
Archana Kalpathi Goat Update

இதனிடையே, இன்று (ஆகஸ்ட் 13) மீண்டும் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட பதிவில், “கோட் படத்தின் ட்ரைலர் அப்டேட் நாளை 6:00 மணிக்கு வெளியாகும்” என வெங்கட் பிரபுவை குறிப்பிட்டு தெரிவித்துள்ளார். இரண்டு பதிவை பகிர்ந்தும் இன்னும் கோட் படத்தின் ட்ரைலர் எப்போது என அப்டேட்டை அர்ச்சனா கல்பாத்தி கொடுக்காமல் இருக்க, அடுத்த பதிவில் அது தெரிய வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒவ்வொரு நாளாக சொல்லிக் கொண்டிருப்பதற்கு நேரடியாக ட்ரைலர் எப்போது என்றே தெரிவித்து விடலாம் என்றும் எங்களை சோதிக்க வேண்டாம் என்றும் ரசிகர்கள் வேடிக்கையாக குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...