புதுச்சேரி ஆளுநரை சந்தித்த விஜய் சேதுபதி… எதற்காக தெரியுமா…?

By Meena

Published:

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும் புகழ் பெற்ற நடிகரும் ஆவார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரின் முழு பெயர் விஜய குருநாத சேதுபதி காளிமுத்து என்பதாகும். குறைந்த காலத்திலேயே 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் விஜய் சேதுபதி.

ஆரம்பத்தில் கூத்து பட்டறையில் கணக்காளராக வேலைக்கு சேர்ந்த விஜயசேதுபதி அங்கு நடிக்கவும் கற்றுக் கொண்டார். பின்னர் சினிமாவில் பின்னணி நடிகராக தனது பயணத்தை தொடங்கிய விஜய் சேதுபதி சில திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில் முக்கிய கதாபாத்திரமாக நண்பராக நடித்தார். கலைஞர் டிவி நடத்திய நாளைய இயக்குனர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் குறும்படங்களில் நடித்தார். விஜய் சேதுபதி 2006 ஆம் ஆண்டு புதுப்பேட்டை திரைப்படத்தில் தனுஷுக்கு நண்பராக நடித்திருப்பார். விஜய் சேதுபதி பின்பு வெண்ணிலா கபடி குழு போன்ற திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் தோன்றினார்.

2019 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் விஜய் சேதுபதி. கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்ட விஜய் சேதுபதி அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்களத்தில் நடித்தார். அது வயதான தோற்றமானாலும் சரி வில்லன் கதாபாத்திரம் என்றாலும் சரி என அத்தனை கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து வெகு விரைவில் பிரபலம் அடைந்தார் விஜய் சேதுபதி.

தனது நடிப்பிற்காக தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதுகள், நார்வே தமிழ் திரைப்பட விருதுகள், எடிசன் விருதுகள், விஜய் விருதுகள், சைமா விருது, ஏசியா விஷன் விருது, ஆனந்த விகடன் சினிமா விருது ஆகிய விருதுகளை வென்றவர் விஜய் சேதுபதி.

சமீபத்தில் அவர் நடித்த மகாராஜா திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றதோடு வெளிநாட்டவர்களும் போற்றக்கூடிய அளவில் புகழ் பெற்றது. Netflix இல் இந்த வருடம் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய திரைப்படம் என்ற இடத்தையும் பிடித்தது விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம். தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

இந்நிலையில் தற்போது ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காக புதுச்சேரி சென்றுள்ளார் விஜய் சேதுபதி. அங்கு சென்ற விஜய் சேதுபதி மரியாதை நிமித்தமாக புதுச்சேரியின் துணைநிலை ஆளுநரான கைலாஷ் நாதன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் விஜய் சேதுபதி.

மேலும் உங்களுக்காக...