செருப்பால அடிங்க.. திரைத்துறையினர் மீதான நடிகைகளின் பாலியல் புகார்களுக்கு விஷால் பளார் பதில்..

By John A

Published:

மலையாளத் திரையுலகை தற்போது நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை புரட்டிப் போட்டுள்ளது. இதன் எதிரொலியாக அடுத்தடுத்து நடிகைகள் இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலர் மீது பாலியல் புகார்களை அடுக்க கூண்டோடு மலையாள திரைப்பட சங்கங்கள் ராஜினாமா செய்து வருகின்றன. மேலும் தங்கள் மீதான இந்த புகார்களுக்கு அவர்கள் விளக்கம் கொடுத்தும், அவற்றை எதிர்கொண்டும் வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் இதுபோன்ற பிரச்சினை இருந்து வருவதாக நடிகை ஷகீலா உள்ளிட்ட சில நடிகைகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் தற்போது நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.

குடிகாரர்களின் மனநிலையை பாடலில் அப்படியே எடுத்துச் சொன்ன கண்ணதாசன்.. மிரண்டு போன எம்.எஸ்.வி..

அதில் தமிழ்த் திரையுலகிலும் இதுபோன்ற நடிகைகளுக்குப் பாலியல் ரீதியான தொந்தரவுகள் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. அவ்வாறு யாராவது வாய்ப்புக் கொடுக்கிறேன் என்று உங்களை அணுகினால் அவங்கல செருப்பால அடிங்க, கேரளாவைப் போல தமிழ்நாட்டிலும் ஹேமா கமிட்டி போன்று ஒன்று உருவாக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எப்போதும் நடிகர் சங்கம் துணையாக நிற்கும். என்னை பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்ற தைரியம் நடிகைகளுக்கு வர வேண்டும்.

சினிமா படம் எடுக்கிறேன் என்று சில உப்புமா கம்பெனிகள் கேமராவை வைத்துக் கொண்டு போட்டோ ஷுட் எடுத்து தவறாக பயன்படுத்துகிறார்கள். எனவே அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டால் அவங்கள செருப்பால அடிங்க என்று பேட்டியளித்தார் விஷால்.

மேலும் ஸ்ரீ ரெட்டி குறித்த கேள்விக்கு ஸ்ரீரெட்டி யார் என்பதே எனக்குத் தெரியாது. அவர் சேட்டைகள் தான் எனக்குத் தெரியும் என்று பதில் அளித்தார் விஷால்.

மேலும் உங்களுக்காக...