தனது 48 வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் விஷால் செய்த செயல்… என்னனு தெரிஞ்சா நீங்களே பாராட்டுவீங்க…

Published:

விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராவார். இவர் நடிகராவதற்கு முன்பு உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். பிரபல தயாரிப்பாளர் ஜி கே ரெட்டி அவர்களின் மகன் தான் நடிகர் விஷால். இவரது முழு பெயர் விஷால் கிருஷ்ணா ரெட்டி என்பதாகும்.

ஆரம்பத்தில் நடிகர் அர்ஜுன் உடன் வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார் விஷால். 2004 ஆம் ஆண்டு செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் விஷால். அடுத்ததாக 2005 ஆம் ஆண்டு சண்டக்கோழி திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் மிகப் பிரபலமாகி பேரும் புகழையும் அடைந்தார் விஷால். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

அடுத்ததாக திமிரு, சிவப்பதிகாரம் திரைப்படங்களில் நடித்தார். 2007 ஆம் ஆண்டு தாமிரபரணி திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படமும் வெற்றி பெற்று அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து தோரணை, தீராத விளையாட்டுப் பிள்ளை, அவன் இவன், பாண்டியநாடு, பூஜை, ஆம்பள, மருது, துப்பறிவாளன், சண்டக்கோழி 2, இரும்புத்திரை ஆகிய படங்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்தை பெற்று தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் விஷால்.

விஷாலின் திரைப்படங்கள் பெருமானானவை ஆப்ஷன் படங்களாகவே இருக்கும். தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் ஃபேக்டரின் மூலமாக படங்களையும் தயாரிக்கிறார் விஷால். இது மட்டும் இல்லாமல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரின் சங்க தலைவராகவும் இருந்து வருகிறார் விஷால். இப்போது துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார் விஷால். இந்த திரைப்படத்தின் மூலமாக இயக்குனராகவும் அறிமுகமாகிறார் விஷால்.

இந்நிலையில் இன்று நடிகர் விஷால் தனது 48வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை கீழ்பாக்கத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்திற்கு சென்ற நடிகர் விஷால், தன் கையால் அங்குள்ள முதியோர்களுக்கு உணவு பரிமாறி தனது பிறந்த நாளை இந்த வருடம் ஆதரவற்ற முதியோர்களுடன் கொண்டாடுகிறார் விஷால். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...