விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். ஆரம்பத்தில் ஒலிப் பொறியாளராக தனது கேரியரை தொடங்கிய விஜய் ஆண்டனி சுக்ரன் திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். 2008 ஆம் ஆண்டு காதலில் விழுந்தேன் திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார்.
தொடர்ந்து நான் அவன் இல்லை, நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், உத்தமபுத்திரன், அங்காடித்தெரு போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. 2014 ஆம் ஆண்டு சலீம் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. இசையமைப்பதை விட நாயகனாக நல்ல வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் விஜய் ஆண்டனி.
2016 ஆம் ஆண்டு பிச்சைக்காரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்று அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார் விஜய் ஆண்டனி. பின்னர் இந்தியா பாகிஸ்தான், சைத்தான், அண்ணாதுரை, திமிரு புடிச்சவன், கோடியில் ஒருவன், பிச்சைக்காரன் 2 போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. தற்போது பல படங்களில் கமிட்டாகி பிசியான நடிகராக இருந்து வருகிறார் விஜய் ஆண்டனி.
இந்நிலையில் தற்போது விஜய் ஆண்டனி நடித்த மார்கன் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு அனைவரும் நல்ல விமர்சனங்களையும் கூறி வருகிறார்கள். ரிலீசான முதல் நாளை விட இரண்டாவது நாள் வணிகரீதியாக முன்னேற்றமும் ஏற்பட்டு இருக்கிறது. இந்த படம் வித்தியாசமான கதைகளத்துடன் விறுவிறுப்பாகவும் இருக்கிறது. ஆரம்பத்தில் விஜய் ஆண்டனி சலீம் பிச்சைக்காரன் போன்ற நல்ல படங்களில் எப்படி நடித்தாரோ அதேபோல் மீண்டும் ஃபார்ம்க்கு வந்து நடித்தது போல் இந்த படம் இருக்கிறது என்று மக்கள் கூறி வருகிறார்கள். அதனால் விஜய் ஆண்டனி முன்னதாக இருந்ததை விட தற்போது அவர் தேர்ந்தெடுக்கும் படமும் நடிப்பும் நன்றாகவே இருக்கிறது என்பதே மக்கள் கருத்தாக இருக்கிறது.