தமிழ் சினிமாவில் பதினாறு வயதினிலே போட்ட பாதை… செம மாஸா இருக்கே!

பாரதிராஜாவின் முதல் படைப்பே பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. ஆம். அதுதான் பதினாறு வயதினிலே. இந்தப் படத்தில் என்னென்ன சிறப்புகள்னு பார்க்கலாமா… 16 வயதினிலே தமிழ் சினிமாவின் மிகப்பெரிய மைல் கல். ரஜினி,…

16 vayathinile

பாரதிராஜாவின் முதல் படைப்பே பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. ஆம். அதுதான் பதினாறு வயதினிலே. இந்தப் படத்தில் என்னென்ன சிறப்புகள்னு பார்க்கலாமா…

16 வயதினிலே தமிழ் சினிமாவின் மிகப்பெரிய மைல் கல். ரஜினி, கமல் வளர்ச்சியில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. பாரதிராஜாக்கு முதல்படமே மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. 1977 ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படம் இயக்குனர் பாரதிராஜாவின் முதல் திரைப்படம் ஆகும். இந்த படத்தில் ரஜினி, கமலஹாசன் ,ஸ்ரீதேவி, காந்திமதி, சத்யராஜ், கவுண்டமணி என பலரும் நடித்துள்ளனர்.

அந்த காலத்தில் அதிகமான வெளிப்புற படப்பிடிப்புகளில் எடுத்த இந்த திரைப்படம் 175 நாட்கள் ஓடி வெள்ளிவிழா கண்டது. இந்த படத்தின் மிக முக்கியமான கேரக்டர் என்றால் படத்தின் வில்லன் பரட்டை தான். முதலில் இந்த கேரக்டரில் பாக்யராஜ் தான் நடிப்பதாக இருந்தது. பின்பு ரஜினிக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்.

கிராமத்தில் வாழும் 16 வயது பெண்ணின் வாழ்க்கையில் நிகழும் நல்லதும், கெட்டதுமான சம்பவங்கள் தான் படத்தின் ஒன்லைன். ஆனால் தமிழ் சினிமா ரசிகர்கள் இதுவரை பார்த்திராத வித்தியாசமான அனுபவத்தை தந்தது இந்தப் படம். அதுவரை ஸ்டுயோவுக்குள் முடங்கி கிடந்த சினிமாவை, அங்கிருந்து வெளிப்புறத்தில் நிஜமான இடங்களுக்கு அழைத்து சென்ற பெருமை இந்த படத்தையே சேரும்.

புழுதி காடுகளுக்கும், செட் இல்லாத நிஜமான இடங்களுக்கும் சென்று படமாக்கப்பட்ட முதல் தமிழ் படமாக 16 வயதினிலே இருந்ததுடன், தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய பாதையை வகுத்து தந்தது. இந்த படத்தின் பிரதான கதாபாத்திரமான மயிலு என்ற பெயரிலேயே கருப்பு வெள்ளை படமாக உருவாக்க எண்ணினார் பாரதிராஜா. ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போனது.