லியோ படத்தின் நா ரெடி பாடலில் விஜய்யுடன் இணைந்த அசல் கோளாறு! புதிய அப்டேட்!

Published:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடலின் ப்ரொமோ நேற்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது.

இந்நிலையில் நா ரெடி எனும் பாடல் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 22 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு சார்பாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பாடல் நாளை வெளியாகவிருக்கும் சூழலில் அட்வான்ஸ் ஆக பாடலின் ப்ரோமோ வெளியிடபட்டு ரசிகர்களின் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் லியோ படத்தில் இரண்டாவது முறையாக இணைத்து நடித்திருக்கிறார். மேலும் சில மாதங்கள் முன் வெளியான படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் நா ரெடி பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார் என ப்ரோமோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்ப்பொழுது இந்த பாடல் குறித்து மேலும் சில சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நா ரெடி பாடலில் நடிகர் விஜய் மற்றும் பிக் பாஸ் புகழ் அசல் கோளாறு ஆகியோர் இணைந்து பாடியுள்ளதாக தகவல் வெளியாக்கியுள்ளது. அவர் ‘ஜோர்த்தாலே’ (2020) என்ற பாடலின் மூலம் பிரபலமானார். இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் பரவி இளைஞர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

2021 ஆம் ஆண்டு வெளியான ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் ‘மீசை வேஸ்டாச்’ என்ற பாடலில் பாடகரும் இசையமைப்பாளருமான சந்தோஷ் நாராயணனுடன் அசல் பணியாற்றினார். மேலும் 2022 இல் இந்திய ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’ சீசன் 6 இன் தமிழ் பதிப்பில் அசல் கோளாறு தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடியாக வெளியான விஜய்யின் லியோ படத்தின் நா ரெடி பாடல் புரோமோ!

பொதுவாக விஜய் அவர்கள் பாடிய பாடல் என்றாலே சூப்பர் ஹிட் ஆகிவிடும், இந்நிலையில் அசல் கோளாறு இந்த பாடலில் இணைந்துள்ளது மேலும் சிறப்பாக அமைந்து விஜய் ரசிகர்களை பெறும் ஆவலுடன் காத்திருக்க வைத்துள்ளது.

மேலும் உங்களுக்காக...