டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற தொழிலதிபர்கள் மாயம்! என்ன நடந்திருக்கும் மர்ம தகவல் இதோ!

Published:

அட்லாண்டிக் கடல் பகுதியில் விபத்து ஏற்பட்டு மூழ்கிய டைட்டானிக்கை காண சுற்றுலா பயணிகளுடன் சென்று நீர்மூழ்கி கப்பல் மாயமான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்பு 2208 பயணிகளுடன் வடக்கு அட்லாண்டிக் கடலில் பயணித்துக் கொண்டிருந்த போது டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இந்த கதையை மையப்படுத்தி ஜேம்ஸ் கேமரூன் எடுத்து டைட்டானிக் திரைப்படம் உலக அளவில் பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதன் பிறகு அட்லாண்டிக் கடலின் 12500 அடி ஆழத்தில் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலைக் காண பலரும் ஆசைப்பட்டனர். இந்த வரிசையில் சமீபத்தில் ஐந்து பேர் கொண்ட குழு ocean gate titan என்று நீர்மூழ்கிக் கப்பலில் சென்றுள்ளனர்.

5 பேர் மட்டுமே செல்ல கூடிய பாதுகாப்பு வசதிகள் நிறைந்த இந்த நீர்மூழ்கி கப்பலில் பிரிட்டன் தொழிலதிபர் ஹமிஷ் ஹார்டிங், பாகிஸ்தான் தொழிலதிபர் சஹதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலைமான் உள்ளிட்ட முக்கிய செல்வந்தர்கள் பயணித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் ஒருவருக்கு இரண்டு கோடி ரூபாய் செலவு செய்து இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நீர்மூழ்கியில் உள்ளவர்கள் 96 மணி நேரம் வரை கடலுக்கு அடியில் சுவாசிக்க முடியும்.

லியோ படத்தின் நா ரெடி பாடலில் விஜய்யுடன் இணைந்த அசல் கோளாறு! அதிர்ச்சி அப்டேட்!

ஆனால் கடலில் இறங்கிய ஒரு மணி நேரம் 45 நிமிடத்திற்கு பிறகு நீர்முழ்கி கப்பல் சிக்னலை இழந்துள்ளது . 110 ஆண்டுகளுக்கு முன்னாள் மூழ்கிய கப்பலை தேடிப்போனவர்கள் மர்மமான முறையில் மாயமாகி உள்ளது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நீர்மூழ்கியில் உள்ளவர்களை உயிருடன் மீட்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் உங்களுக்காக...