அதிரடியாக வெளியான விஜய்யின் லியோ படத்தின் நா ரெடி பாடல் புரோமோ!

விஜய் நடிக்கும் லியோ படத்தில் இருந்து வெளியாகவுள்ள ஃபர்ஸ்ட் சிங்கிள் நா ரெடி பாடலின் ப்ரொமோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த 16 ஆம் தேதி விஜய் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நா ரெடி என பாடல் வரும் 22 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தார்.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த பாடல் வெளியாகவிருக்கும் சூழலில் தற்போது அட்வான்ஸ் ஆக பாடலின் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.1000த்திற்கும் மேற்பட்ட நடன கலைஞர்களை வைத்து இந்த பிரமாண்ட பாடலை படமாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார். மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் லியோ படத்தில் நடித்திருக்கிறார். சில மாதங்கள் முன் வெளியான படத்தின் டீசர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் 67 வது படமாக உருவாகும் இந்த லியோ படத்தில் திரிஷா, சஞ்சய் தத் , அர்ஜுன்,கௌதம் மேனன், மிஸ்கின், மன்சூர் அலிகான் , பிரியா ஆனந்த் ,சாண்டி , ஜனனி , அபிராமி , வெங்கடாசலம் ,தாமஸ் , பாபு ஆண்டனி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்தியன் 2 படப்பிடிப்பு! லேட்டஸ்ட் அப்டேட்!

படத்திற்கு அனிருத் இசையமைத்து மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார். மேலும் அன்பறிவு சண்டைகாட்சிகளை எடிட்டிங் செய்து வருகிறார். இந்நிலையில் லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி உலக முழுவதும் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...