செப்டம்பர் 28 ஆம் தேதி மோதிக்கொள்ளும் படங்களின் லிஸ்ட்! இவ்ளோ படங்கள் ஒரே நாளா?

பொதுவாக பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் மாஸ் ஹீரோக்களின் படங்கள் திரையங்குகளில் வெளியாகி மக்களை மகிழ்விப்பது வழக்கம். ஒரே நாட்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஹீரோக்களின் படங்கள் வெளியாகி பல போட்டிகளை சந்தித்து வசூலை வாரி இறைப்பதும், சில படங்கள் படுதோல்வி அடைவதும் நடந்து வருகிறது.

அந்த வகையில் மாஸ் ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் நாட்களில் சின்ன படங்களுக்கும் அல்லது நடுத்தர படங்களுக்கும் பெரிதாக தியேட்டர்கள் கிடைப்பதில்லை. இதை கருத்தில் கொண்டு ஒரு பெரிய மாஸ் ஹீரோ படம் ரிலீஸ் ஆகி சில வாரங்கள் கடந்த நிலையில் அந்த இடைவெளியில் தனது சிறிய பட்ஜெட் படங்களை வெளியிட பல படங்கள் போட்டி போட்டு வருகிறது.

அப்படி பார்க்கும்போது வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி ஏகப்பட்ட தமிழ் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளது. குறிப்பாக செப்டம்பர் 28 ஆம் தேதி மட்டும் கிட்டத்தட்ட 5க்கு மேற்பட்ட படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதில் மிக முக்கியமான படங்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அதில் முதல் இடத்தில் ஜெயம் ரவி நடித்த இறைவன் திரைப்படம் வெளியாகிறது. இந்த படத்தில் தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியும், நயன்தாராவும் இணைந்து நடித்துள்ளனர். அஹமத் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் சைக்கோ சீரியல் கில்லர் படமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

அடுத்ததாக பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் சந்திரமுகி 2. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் வடிவேலு, ராதிகா, கங்கனா ரணாவத், லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, சுபிக்ஷா கிருஷ்ணன், ரவி மரியா, கார்த்திக் சீனிவாசன் என பெரும் நட்சத்திர பட்டாளமே உள்ளது. இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும் படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.

முன்னதாக இந்த படம் விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸாக இருந்த நிலையில் தற்போது இரண்டு வாரம் தள்ளி செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

அடுத்ததாக நடிகர் சித்தார்த் நடிக்கும் சித்தா படம் அதே நாளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் மையக்கதை ஒரு சித்தப்பாவிற்கும் குழந்தைக்குமான பாச போராட்டத்தை கதைக்களமாக கொண்டது.

இந்த படத்தின் இயக்குனர் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி என்னும் வெற்றி படம் கொடுத்த இயக்குனர் அருண்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் இறுதியில் வெளியான சிந்துபாத் படம் படு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.எப்படி இருந்ததாலும் இயக்குனர் இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமும் செப்டம்பர் 28ம் தேதி திரைக்கு வர உள்ளது.

குழப்பத்திற்கு மத்தியில் மாஸ் அப்டேட் வெளியிட்ட சன் பிச்சர்ஸ்! உறுதியான ரஜினி – லோகேஷ் கூட்டணி!

அடுத்ததாக விஜய் ஆண்டனி நடிப்பில் ரத்தம் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் இயக்குனர் சி எஸ் அமுதன். இதற்கு முன்பு தமிழ் படம், தமிழ் படம் 2 என்னும் படங்களை இயக்கிய இயக்குனர் இவர் தான். இவரின் படங்கள் பொதுவாக மற்ற படங்களை கலாய்க்கும் விதத்தில் இருக்கும், இருப்பினும் இவர் தற்போது ஒரு ஹீரோவை வைத்து முறையான ஒரு படத்தை இயக்குவதால் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படமும் அதே நாள் வெளியாக உள்ளது.

அடுத்ததாக ஹாரிஸ் கல்யாணின் நடிப்பில் பார்க்கிங் திரைப்படம் வெளியாக உள்ளது. அதாவது கார் பார்க்கிங்கின் போது இரு குடும்பங்களுக்கு ஏற்படும் பிரச்சனை தான் இந்த படத்தின் கதை. இந்த படமும் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் செப்டம்பர் 28 ஆம் தேதி ஒரே நாளில் வெளியாகும் இந்த படங்களில் எந்த படம் ஹிட் அடிக்க போகிறது என காத்திருந்து பார்க்க வேண்டும். மேலும் இந்த படங்களின் திரைக்கதை‌ மற்றும் கதை பொறுத்தே வெற்றி அமையும் என்பது உறுதி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...