தமன்னா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தனது 13 வது வயதில் இருந்தே நடிக்க ஆரம்பித்தார் தமன்னா. 2005 ஆம் ஆண்டு இந்தி திரையுலகில் நாயகியாக அறிமுகமானார் தமன்னா.
2006 ஆம் ஆண்டு கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் தமன்னா. அதை தொடர்ந்து வியாபாரி கல்லூரி போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2009 ஆம் ஆண்டு தனுசுக்கு ஜோடியாக படிக்காதவன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார் தமன்னா.
பின்னர் அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை என பல முன்னணி நடிகர்கள் உடன் நடித்து 2010 காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் தமன்னா.
2010 காலகட்டத்திற்கு பிறகு வீரம் நண்பேண்டா பாகுபலி தோழா போன்ற குறைந்த திரைப்படங்களில் தமன்னா நடித்திருக்கிறார். தற்போது பல திரைப்படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சியாக நடனமாடி வருகிறார் தமன்னா. அதற்காக அவர் பெரிய தொகையை சம்பளமாக பெறுவதாகவும் கூறப்படுகிறது. அதை பற்றிய ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
அது என்னவென்றால் இந்தியில் ரெய்டு- 2 என்ற திரைப்படத்தில் ஒரு ஐந்து நிமிட பாடலுக்கு நடனம் ஆடுவதற்கு ஐந்து கோடி சம்பளம் பெற்று இருக்கிறாராம் தமன்னா. இதன் மூலம் ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி சம்பளம் என பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திருக்கிறார் தமன்னா.