பிரபுதேவா நடித்த இந்த ஹிட் படத்தில் முதலில் நடிக்க இருந்தது பிரஷாந்த் தானா…? இப்படி மிஸ் ஆகிடுச்சே…

பிரஷாந்த் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற நடிகர் ஆவார். இவரது தந்தை தியாகராஜன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய மூத்த நடிகர். அதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1990 ஆம்…

rashanth

பிரஷாந்த் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற நடிகர் ஆவார். இவரது தந்தை தியாகராஜன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய மூத்த நடிகர். அதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1990 ஆம் ஆண்டு வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் பிரசாந்த. முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது.

தொடர்ந்து செம்பருத்தி, உனக்காக பிறந்தேன், கண்மணி, செந்தமிழ் செல்வன், ஆணழகன், ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், பூமகள் ஊர்வலம், ஜோடி, ஹலோ என 1990 முதல் 2000 கால கட்டத்தில் வரை புகழின் உச்சியில் முன்னணி நடிகராக இருந்தார் பிரசாந்த்.

2000 காலகட்டத்திற்கு பிறகு கமர்சியல் படங்களான சாக்லேட், மஜ்னு, விரும்புகிறேன், வின்னர், ஆயுதம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். ஆனால் இவர் தேர்ந்தெடுத்த பல கதைகள் இவருக்கு பெயர் வாங்கி தரவில்லை. அதனால் 2010 காலகட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார் பிரசாந்த்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு அந்தகன் திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார் பிரசாந்த். அதுமட்டுமில்லாமல் விஜயின் கோட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது பல படங்களில் கமிட்டாகி மீண்டும் நடித்துக் கொண்டிருக்கிறார் பிரசாந்த் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரசாந்த் பற்றிய ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால் பிரபுதேவா நடித்த ஹிட் படமான காதலா திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது பிரசாந்த் தானாம். காதலா திரைப்படம் பிரபுதேவாவுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இந்த படத்தில் பிரசாந்த் நடித்திருந்தால் நன்றாக இருக்குமே என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.