இந்த நிலையில், சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்த 82 வயது ஓய்வு பெற்ற கர்னல் ஒருவரை, “சுப்ரீம் கோர்ட் கைது உத்தரவு” என்று போலியாக தயாரித்து 3.41 கோடி ரூபாய் மோசடி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை அதிகாரி போல் வீடியோ காலில் வந்த ஒரு மர்ம நபர், கர்னலிடம் தொடர்பு கொண்டு, “உங்களை டிஜிட்டல் அரசு செய்கிறோம், இது தான் சுப்ரீம் கோர்ட் ஆர்டர்” என்று காண்பித்துள்ளார். அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக “என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டுள்ளார்.
அதற்குப் பதிலாக, “நாங்கள் சில வங்கி கணக்குகளை கொடுக்கிறோம்; அதில் நீங்கள் பணத்தை டிரான்ஸ்பர் செய்தால் கைது உத்தரவை திரும்ப பெறலாம். இல்லை என்றால் இன்னும் சில நிமிடங்களில் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்” என்று கூறியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த கர்னல், அந்த நபருக்கு உரிய வங்கி கணக்குகளுக்கு சுமார் 3.41 கோடி ரூபாய் வரை அனுப்பியிருக்கிறார். அதன் பிறகு தான் இது மோசடி என்பதை புரிந்து கொண்ட அவர், உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்த வழக்கை சைபர் கிரைம் குற்றப்பிரிவு அதிரடியாக விசாரணை செய்தது. பணம் போன வங்கி கணக்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உறுப்பினர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
ஒரு சில மணி நேரத்தில், 9.4 லட்சம் ரூபாய் இருந்த ஒரு துபாய் வங்கி கணக்கு முடக்கப்பட்டு, அந்த வங்கி கணக்கு தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இன்னும் சிலர் கைது செய்யப்பட்டதாகவும், இதுவரை ஒரு கோடி ரூபாய் வரை மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மோசடியில் முக்கிய குற்றவாளி தப்பி விட்டதாகவும், அந்த நபரை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தினந்தோறும் செய்திகள் “டிஜிட்டல் அரெஸ்ட்” என்பது போலியானது; அப்படி ஒரு முறையே இந்தியாவில் இல்லை என்று விழிப்புணர்வை ஏற்படுத்திய போதிலும், பொதுமக்கள் இன்னும் “டிஜிட்டல் அரெஸ்ட்டில் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
அதுவும் இன்றி, சுப்ரீம் கோர்ட் கைது உத்தரவையே போலியாக தயாரிக்கும் அளவுக்கு மோசடியாளர்கள் வேற லெவலில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபட்டு வருவது, மக்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.