சூர்யாவும் கார்த்தியும் 916 ஹால்மார்க் கோல்டு… நடிகை ப்ரியாமணி புகழாரம்…

சூர்யா தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி நடிகர் ஆவார். இவரது தந்தை சிவக்குமார் தமிழ் சினிமாவில் பணியாற்றிய மூத்த நடிகர். அதன்மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு சூர்யாவிற்கு கிடைத்தது. இவரது இளைய சகோதரர்…

surya

சூர்யா தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி நடிகர் ஆவார். இவரது தந்தை சிவக்குமார் தமிழ் சினிமாவில் பணியாற்றிய மூத்த நடிகர். அதன்மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு சூர்யாவிற்கு கிடைத்தது. இவரது இளைய சகோதரர் கார்த்திக் மற்றும் இவரது மனைவி ஜோதிகா ஆகியோரும் முன்னணி நடிகர்களாக இருக்கின்றனர்.

1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் சூர்யா. 2001 ஆம் ஆண்டு நந்தா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார். தொடர்ந்து காக்க காக்க, பிதாமகன், வேல், வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு என 2010 காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் சூர்யா.

இவரை மேலும் பிரபலமாக்கியது சிங்கம் பட தொடராகும். சிங்கம் ஒன்று இரண்டு மூன்று என்ற மூன்று பாகங்களும் வெற்றி பெற்றது. 2015 காலகட்டத்திற்கு பிறகு இவர் நடித்த படங்கள் பெரிதாக வணீக ரீதியாக வெற்றிப் பெறவில்லை. இறுதியாக இவர் நடித்த கங்குவா திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றத்தை பெற்றது.

தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் Retro திரைப்படத்திலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருந்தார் சூர்யா. இதில் Retro திரைப்படம் முடிவடைந்து ரிலீஸானது. ஆனால் இப்படம் பெரிதாக பேசப்படவில்லை.

அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கி சூர்யா நடித்த கருப்பு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை ப்ரியாமணி ஒரு நேர்காணலில் சூர்யா மற்றும் கார்த்தியை புகழ்ந்து பேசி இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், நான் சூர்யாவுடனும் கார்த்தியுடனும் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். இருவருமே 916 ஹால்மார்க் கோல்டு. அப்படி ஒரு தன்மையாக அன்பாக பழகுவார்கள். மிகவும் அற்புதமான மனிதர்கள் என்று பகிர்ந்து இருக்கிறார் நடிகை ப்ரியாமணி.