சிம்புவோட இந்த கேரக்டர்ல நடிக்கணும்னு எனக்கு ரொம்ப வருஷம் கனவா இருந்தது… நடிகர் சித்தார்த் ஓபன் டாக்…

சித்தார்த் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகர் பின்னணி பாடகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். 2003 ஆம் ஆண்டு பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகராக மட்டுமல்லாமல்…

sidharth

சித்தார்த் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகர் பின்னணி பாடகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். 2003 ஆம் ஆண்டு பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகராக மட்டுமல்லாமல் உதவி இயக்குனராகமும் பணிபுரிந்தார் சித்தார்த். தொடர்ந்து ஆயுத எழுத்து படத்தில் நடித்தார். பின்னர் தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கினார் சித்தார்த்.

நீண்ட காலம் தெலுங்கு சினிமாவில் பணியாற்றி புகழ் பெற்ற பிறகு 2014 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு திரும்பினார் சித்தார்த். அந்த ஆண்டு ஜிகர்தண்டா திரைப்படத்தில் நடித்தார். பின்னர் காவியத்தலைவன், எனக்குள் ஒருவன், ஜில் ஜங் ஜக், சிகப்பு மஞ்சள் பச்சை, காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை 2, இந்தியன் 2, அருவம் போன்ற திரைப்படங்களில் நடித்தார் சித்தார்த்.

2023 ஆம் ஆண்டு சித்தா என்ற திரைப்படத்தில் நடித்து அந்த படத்தை தயாரிக்கவும் செய்தார். சித்தா திரைப்படம் விமர்சன ரீதியாக அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. அடுத்ததாக இந்தியன் 3 மற்றும் பலப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் சித்தார்த். இவர் நடிகை அதிதி ராவை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் நடித்த 3BHK படம் வெளிவர இருக்கிறது.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட நடிகர் சித்தார்த் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் தொட்டி ஜெயா திரைப்படத்தில் சிம்பு நடித்த கேரக்டரில் நடிப்பது தனது கனவாக இருந்தது என்று கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், தொட்டி ஜெயா படத்தில் சிம்பு எப்படி தாடி எல்லாம் வளர்த்துக்கொண்டு அருமையாக நடித்திருப்பாரோ அதேபோல் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது எனது பல வருட கனவாக இருந்தது. ஆனால் எனக்கு அவ்வளவு தாடி வரவில்லை என்பதால் என்னால் நடிக்க முடியவில்லை என்று பகிர்ந்திருக்கிறார் நடிகர் சித்தார்த்.