சூர்யாவை பிரிந்து மும்பையில் வசிக்கும் ஜோதிகா?.. பதறிப் போன ரசிகர்கள்.. உண்மையாக நடப்பது என்ன?

Published:

திரைப்படங்களில் மட்டுமில்லாமல், நிஜ வாழ்க்கையிலும் அசத்தலான ஜோடியாக இருப்பவர்கள் தான் சூர்யா – ஜோதிகா ஆகியோர். இவர்கள் இருவரும் திரைப்படத்தில் இணைந்து நடித்த போது அவர்களுக்கு இடையே காதல் உருவாகி இருந்தது. இதற்கடுத்து பொது வெளியில் அவர்களது காதல் பற்றியும் தெரிய வர, பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணமும் செய்து கொண்டனர்.

பூவெல்லாம் கேட்டு பார், சில்லுன்னு ஒரு காதல், காக்க காக்க உள்ளிட்ட திரைப்படங்களில் இணைந்து நடித்த சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர், தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்களாகவும் தற்போது வரை தொடர்ந்து வருகின்றனர். திருமணத்திற்கு பின்னர் ஆரம்ப கட்டத்தில் திரைப்படங்கள் எதுவும் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா, பின்னர் 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்பில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இதற்கடுத்து நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தற்போது வரை தொடர்ந்து நடித்து வருகிறார் ஜோதிகா. செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி, தம்பி, பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதைக் களங்களை தேர்வு செய்து நடித்திருந்தார். இதற்கடுத்து, சமீபத்தில் மலையாளத்தில், மம்மூட்டி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான காதல் தி கோர் என்ற திரைப்படத்தில் ஜோதிகாவின் நடிப்பு, இந்திய அளவில் அதிக பாராட்டுக்களை பெற்றிருந்தது.

இதன் பின்னர், ஹிந்தியில் ஜோதிகா நடித்துள்ள ஷைத்தான் படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருந்தது. இன்னொரு பக்கம், நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக பிரம்மாண்டமான முறையில், கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. அதிக பொருட்செலவில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை, ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.
Are Jyothika and Suriya separating? Actress clarifies her Mumbai move

இந்த நிலையில், திருமணமாகி சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் பிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிய சூழலில், இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஜோதிகா. இவர் சமீபத்தில் சூர்யாவை பிரிந்து விட்டு மும்பையில் தனது குழந்தைகளுடன் வசித்து வருவதாக தகவல் வெளியானது.

இதனால், சூர்யாவை பிரிந்ததால் தான் அவர் மும்பையில் வசித்து வருவதாகவும் கூட தகவல்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனால், ரசிகர்களும் குழப்பத்திற்கு ஆளாக இது பற்றி நடிகை ஜோதிகாவே தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். குழந்தைகள் மும்பையில் தங்கி படிப்பதால் தான் தற்போது அவர் மும்பையில் வசித்து வருவதாகவும் விவரத்தை சொல்ல, ரசிகர்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

மேலும் உங்களுக்காக...