ஒரு பக்கம் அரசியல்!.. இன்னொரு பக்கம் தளபதி 69.. கமல்ஹாசன் ரூட்டில் கலக்கும் விஜய்!..

Published:

அரசியல் மற்றும் சினிமா என ஒரே நேரத்தில் இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார் கமல்ஹாசன். தேர்தல் நெருங்கும் நேரத்திலும் பிக் பாஸ், இந்தியன் 2, கல்கி, தக் லைஃப் என சகலகலா வல்லவன் தான் என்பதை நிரூபித்து வருகிறார். அதே வழியில் தற்போது தளபதி விஜய்யும் பயணிக்கப் போவதாக கருத்துகள் வெளியாகியுள்ளன.

வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வரும் விஜய் அந்த படத்தை முடித்துவிட்டு மொத்தமாக சினிமாவுக்கு சில ஆண்டுகள் ரெஸ்ட் கொடுத்துவிட்டு அரசியலில் தீவிரமாக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தளபதி 69 படத்திற்கும் தயாரிப்பாளரை லாக் செய்து விட்டார் விஜய் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆர்ஆர்ஆர் தயாரிப்பு நிறுவனம்:

ஏஜிஎஸ் தயாரிப்பில் நடித்து வரும் விஜய் கோட் படத்திற்காக 200 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அடுத்து அவருடைய சம்பளம் 200 கோடி ரூபாய்க்கும் மேலிருக்கும் நிலையில், ஆர்ஆர்ஆர் படத்தை தயாரித்த தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான டிவிவி தான் தயாரிக்கப் போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மார்ச் மாதம் இறுதிக்குள் கோட் படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக நிறைவடைய உள்ள நிலையில் அந்த படத்திற்கு பிறகு அதிரடியாக இன்னொரு படத்திலும் நடித்து முடித்துவிட்டு 2025-ஆம் ஆண்டு பொங்கலுக்கு தளபதி 69 படத்தை ரிலீஸ் செய்ய விஜய் முடிவுசெய்து இருப்பதாக கூறுகின்றனர். அந்த படத்துக்கு கொஞ்சம் ஷங்கர் இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜயை இயக்குவார் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிக சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும் நிலையில் சன் பிக்சர்ஸ் விஜய் படத்தை தயாரிப்பதில் இருந்து விலகி விட்டதாக கூறுகின்றனர்.

அரசியலும் சினிமாவும்:

கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு தரப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சினிமாவில் அடுத்தடுத்து பிசியாகி வரும் விஜய் அதே அளவுக்கு அரசியலிலும் முழு மூச்சாக இறங்கி பார்த்து விடலாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டாராம்.

வந்தா மலை போனா போகட்டும் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தால், எப்போதுமே பாக்ஸ் ஆபிஸ் கிங் தானே என்பதால், தைரியமாக மக்களுக்காக நல்லது செய்ய முயற்சிக்கலாம். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தமிழ்நாட்டில் புதிய கட்சியை ஆரம்பிக்க முயற்சித்து வருகிறாராம். கட்சிக்கு தமிழக முன்னேற்ற கழகம் என்கிற பெயரை வைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், கட்சியின் பெயர் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

மேலும் உங்களுக்காக...