வைரலாகும் சிம்புவின் வீடியோ… பெரிய படை பலத்துடன் கம்பீரமாக வந்து அசத்தல்… இதற்காகத் தான் வெயிட்டிங்காம்…!

By Sankar Velu

Published:

சிம்பு என்றாலே செம மாஸ் அண்டு கியூட்டான நடிகர். ஆரம்பத்தில் விரல் வித்தைக் காட்டியே ரசிகர்களுக்குப் போகப் போக வெறுப்பேற்றினாலும் அடுத்தடுத்து வளர்ந்த நிலையில் முதிர்ச்சியான நடிப்பில் தரமான படங்களைக் கொடுத்துவிட்டார்.

சமீபத்தில் அவர் கதை தேர்விலும் கவனம் செலுத்தி வருவதால் அவரது படங்கள் எல்லாமே மாஸாகி வருகின்றன. தற்போது 41வயதாகி வந்தாலும் இன்னும் 30 வயதுக்குரிய துள்ளலுடன் தான் நடித்து வருகிறார் சிம்பு.

வெந்து தணிந்தது காடு, பத்து தல படத்திற்கு அப்புறமா சிம்பு நடிக்கும் 48வது படம் தான் இது. கமல்ஹாசன் தயாரிப்பில் வெளிவருவதால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார். இது ஒரு வரலாற்றுப்படமாகத் தயாராகி வருகிறது. இதுல சிம்பு கெட்டப் செம மாஸா இருக்கு. ஒரு அரசரோட தோற்றத்தில் மிரட்டலாக வருகிறார். பர்ஸ்ட் லுக் அப்படித் தான் இருந்தது. இந்தப் படத்தில் சிம்பு ஹீரோ, திருநங்கை என மாறுபட்ட 2 வேடங்களில் வருகிறார். இந்தப்படத்தில் திருநங்கையாக நடிப்பதால் ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்துப் படத்திற்காகக் காத்துக்கொண்டு உள்ளனர்.

STR 48 A
STR 48 A

சிம்புவோட சமீபத்திய படங்கள் எல்லாமே அவரோட மாறுபட்ட தோற்றத்துடன் தான் வருகிறது. எஸ்டிஆர் 48 படத்தோட தகவல்களும் வைரலாகி வருகிறது. தற்போது சிம்பு ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அது 25 செகண்ட்ஸ் ஓடுகிறது. இதுல பெரிய கோட்டையும் அதுக்கு முன்னாடி மிகப்பெரிய படையும் இருக்கு. அதுல மாஸ் என்ட்ரியா சிம்பு கோட்டையை விட்டு வெளியே வந்து தன்னோட படைகளைப் பார்க்குறாரு.

இந்தப்படம் ஹாலிவுட் ரேஞ்ச்சுக்குத் தயாராகி வருவது தெரிகிறது. இந்த வீடியோவைப் பகிர்ந்த சிம்புவும் இந்த ஒண்ணுக்காகத் தான் உற்சாகமா இருக்கேன்னும் தன்னோட சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அவரோட இந்தப் பதிவின் மூலம் எஸ்டிஆர் 48 க்கு இனி வரப்போகும் எந்த அப்டேட்களாக இருந்தாலும் அது தரமானதாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் சில நாள்களில் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. இந்தப்படத்திற்காக விஎப்எக்ஸ் பணிகள் மற்றும் செட் குறித்து நிபுணர் குழுவுடன் இயக்குனர் தேசிங்கு ராஜன் திட்டமிட்டு வருகிறார்.

படத்திற்கு கேஜிஎப் புகழ் ரவி பஸ்ரூர் இசை அமைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படாமல் உள்ளது. இந்தப் படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் அதிகமாக இருப்பதால் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.

மேலும் உங்களுக்காக...