எம்ஜிஆருடன் அவருடைய காலத்தில் சினிமாவில் இருந்த எல்லோருமே நடித்திருப்பார்கள். ஆனால் ஒரு சில நடிகர்கள் மட்டுமே அவரிடம் இருந்து விலகி இருந்தனர். எம்ஜிஆர், சிவாஜி நடித்த கூண்டுக்கிளி என்ற திரைப்படம் திரையரங்கில் வெளியாகிய மிகப்பெரிய பிரச்சனையானதால் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால் எஎம்ஜிஆருடன் இணக்கமா இருந்த ஒரு சிலர் கூட ஒரே ஒரு படத்துடன் நின்று விட்டனர் என்பது தான் ஆச்சரியமான தகவல்.
அந்த வகையில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், கே பாலாஜி, தேவிகா ஆகிய நால்வரும் எம்.ஜி.ஆருடன் ஒரு படத்தில் மட்டும் தான் நடித்தனர். அதேபோல் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமல்ஹாசனும் எஎம்ஜிஆர் கூட ஆனந்த ஜோதி என்ற ஒரு திரைப்படத்தில் மட்டுமே நடித்தார்.
எம்ஜிஆர் அறிமுகமான படத்தில் அறிமுகம்.. 1000 படங்களுக்கும் மேல் நடித்த தங்கவேலுவின் கதை..!
எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இருவரும் இணைந்து நடித்த கூண்டுக்கிளி திரைப்படம் கடந்த 1954 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ஆரம்பத்தில் எம்ஜிஆர், சிவாஜி நண்பர்களாக இருந்தாலும் அதன் பின் எம்.ஜி.ஆரின் மனைவியை சிவாஜி அபகரிக்க முயற்சி செய்வார். சிறைக்கு செல்லும் எம்ஜிஆர் திரும்பி வந்து சிவாஜியை அடித்து நொறுக்குவார். இருவருக்கும் நடக்கும் சண்டை காட்சி காரணமாக திரையரங்குகளில் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி ரசிகர்கள் மோதிக்கொண்டது பெரும் பிரச்சனையானது. அதன் பிறகு எம்ஜிஆர், சிவாஜியை வைத்து படம் தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை.
இந்த நிலையில் எம்ஜிஆருடன் ஒரே ஒரு படத்தில் நடித்தவர் தேவிகா. அந்த படம் தான் ஆனந்த ஜோதி. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் கதையும் சிறப்பாக இருந்தது. பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருக்கும் எம்ஜிஆர் மீது ஒரு கொலைப்பழி வந்துவிடும், அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வந்தார் என்பது தான் இந்த படத்தின் கதை. எம்ஜிஆர் தேவிகா இடையே இந்த படத்தில் நல்ல கெமிஸ்ட்ரி ஏற்பட்டது. இருந்தாலும் அதன் பிறகு இருவரும் இணைந்து ஏன் நடிக்கவில்லை என்பதும் பெரிய கேள்விக்குறியாக இருந்தது.
இதே படத்தில் தேவிகாவின் சகோதரராக கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். மேலும் எம்ஜிஆர் பணிபுரியும் பள்ளியில் படிக்கும் மாணவனாக இருந்தாலும் எம்ஜிஆருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இருந்தன. இதன் பிறகு ஒரு சில படங்களில் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்தாலும் எம்ஜிஆருடன் நடிக்கவில்லை.
எம்ஜிஆர் காலத்தில் சிறந்த நடிகராக இருந்தவர்களில் ஒருவர் ஜெமினி கணேசன். இவர் சிவாஜி கணேசனுடன் பல படங்களில் இணைந்து நடித்தாலும் எம்ஜிஆருடன் ஒரே ஒரு படத்தில் மட்டுமே இணைந்து நடித்திருந்தார். அந்த படம் தான் முகராசி. இந்த படத்தில் எம்ஜிஆர், ஜெமினி ஆகிய இருவரும் அண்ணன் தம்பிகளாக நடித்திருப்பார்கள். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஜெமினி தான் நடிக்க வேண்டும் என்று எம்ஜிஆர் விரும்பி அழைத்ததால் ஜெமினி நடித்தார். இதன் பிறகு ஏன் எம்ஜிஆர், ஜெமினி இணைந்து நடிக்கவில்லை என்பதும் யாருக்கும் தெரியாத புதிராக இருந்தது.
கடைசி நேரத்திலும் கமலின் மகளுக்காக எம்ஜிஆர் கொடுத்த அன்பு பரிசு என்ன தெரியுமா?
இதேபோல் எம்ஜிஆர் உடன் ஒரே ஒரு படத்தில் நடித்தவர் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் பாலாஜி. அந்த படம் தான் என் கடமை. காவல்துறை அதிகாரியாக எம்ஜிஆர் நடித்த இந்த படத்தில் கே பாலாஜி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். சிவாஜி கணேசன் நடித்த ஏராளமான திரைப்படங்களை தயாரித்த கே பாலாஜி, எம்ஜிஆரை வைத்து ஒரே ஒரு படமாவது தயாரிக்க முயற்சி செய்தார். ஆனால் அந்த முயற்சி கடைசி வரை நிறைவேறவில்லை. இருப்பினும் எம்ஜிஆர், பாலாஜி இணைந்து நடித்த ஒரே படமான என் கடமை நல்ல வெற்றியை பெற்றது.