எம்ஜிஆர் அறிமுகமான படத்தில் அறிமுகம்.. 1000 படங்களுக்கும் மேல் நடித்த தங்கவேலுவின் கதை..!

எம்ஜிஆர் அறிமுகமான ‘சதிலீலாவதி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய காமெடி நடிகராக இருந்தவர் தங்கவேலு.

நடிகர் தங்கவேலு காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை அருணாச்சலம் குடிகாரராக இருந்ததால் சிறு வயதிலேயே அவர் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருந்தார். அவர் ஆறு வயதாக இருக்கும்போதே அவரது தாயார் காலமானார். இதனையடுத்து அவரது தந்தை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நிலையில் தங்கவேலு மிகவும் கஷ்டப்பட்டார்.

ஒரே டைட்டில், ஒரே கதை.. ஒரே நாளில் தனித்தனியாக விளம்பரம் கொடுத்த எம்ஜிஆர்-சிவாஜி..!

thangavelu2

அப்போதுதான் அவருக்கு நாடகங்கள் மீது விருப்பம் ஏற்பட்டது. ஒன்பது வயதிலேயே அவர் நாடக கம்பெனியில் சேர்ந்தார். அவரது நாடக கம்பெனியில் தான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இருந்தார். இருவரும் வாடா போடா என்று பேசிக்கொள்ளும் அளவுக்கு நெருக்கமான நண்பர்கள்.

நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த தங்கவேலுவுக்கு ‘சதிலீலாவதி’ என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் தான் எம்ஜிஆர் அறிமுகமானார். இந்த படத்தில் தங்கவேலுக்கு சிறிய கேரக்டர்தான் என்றாலும் அதன் பின் அடுத்தடுத்து இவருக்கு படங்கள் குவிந்தது.

தங்கவேலுவுக்கு முதன்முதலில் திருப்புமுனை ஏற்படுத்திய படம் ‘பணம்’. இந்த படத்தில் நடித்தததற்காக அந்த காலத்திலேயே 5000 ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது. இதன் பிறகு எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து அவர் நடித்தார். அவருடைய நகைச்சுவைக்கு என்றே ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது.

thangavelu1 scaled

குறிப்பாக ‘கல்யாண பரிசு’ படத்தில் நடித்த தங்கவேலுவின் காமெடி இன்றும் பிரபலமாக இருக்கிறது. அதேபோல் ‘அறிவாளி’ படத்தில் முத்துலட்சுமியுடன் இணைந்து பூரி சுடும் காட்சி, தெய்வப்பிறவி படத்தில் இடம்பெறும் காமெடி ஆகியவை பிரபலமான காமெடி காட்சிகள்.

பட்ஜெட்டை விட 800 மடங்கு லாபம்.. எம்ஜிஆர் இயக்கிய முதல் திரைப்படம்..! என்ன படம் தெரியுமா?

பின்னாளில் மிகப்பெரிய காமெடி நடிகர்களாக இருந்த கவுண்டமணி, சந்தானம் உள்ளிட்டோர் தங்களுக்கு தங்கவேலு நடிப்பு தான் பிடிக்கும் என்றும் தங்களுடைய டைமிங் காமெடிக்கு அவர் தான் காரணம் என்று பேட்டி அளித்திருந்தனர்.

தங்கவேலு முதலில் ராஜாமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். பின்னர் அவர் தன்னுடன் சுமார் 50 படங்களுக்கு மேல் ஜோடியாக நடித்த எம்.சரோஜா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். என்.எஸ்.கிருஷ்ணன் – டி.ஏ.மதுரம் ஜோடிக்கு பிறகு தங்கவேலு – சரோஜா ஜோடி திரையுலகில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

thangavelu

நடிகர் தங்கவேலு கடைசியாக விஜயகாந்த் நடித்த ‘பெரிய மருது’ என்ற திரைப்படத்தில் வாத்தியார் என்ற கேரக்டரில் நடித்தார். இந்த படம் 1994ஆம் ஆண்டு வெளியானது. அதே ஆண்டுதான் தங்கவேலு உடல் நல குறைவால் காலமானார். தங்கவேலு திமுகவின் தீவிர உறுப்பினராக இருந்தார் என்பதால் அவர் மறைந்த தினத்தில் திமுகவின் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

பாதியில் நின்ற சிவாஜி படம்.. எம்ஜிஆர் படத்தை எடுத்து அதில் கிடைத்த லாபத்தில் மீண்டும் தொடக்கம்..

காலத்தால் அழியாத பல காமெடி காட்சிகளை கொடுத்தவர் தங்கவேலு. சினிமா உள்ளவரை அவரது புகழ் இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews