நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய மகன் பிரபு பல படங்களில் நடித்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவரது நூறாவது படம் ராஜகுமாரன். இன்றும் அவர் குணசேத்திர கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு கூட வாரிசு, பொன்னியின் செல்வன், ராவணக்கோட்டம், காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் ஆகிய நான்கு படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் பிரபு திரையுலகில் பிஸியாக இருந்தாலும் அவரது அண்ணன் அதாவது சிவாஜி கணேசன் மூத்த மகன் ராம்குமார் திரைப்படங்களில் நடிப்பதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் அதே நேரத்தில் அவர் சிவாஜி புரொடக்ஷன் நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்தார்.
ராம்குமார் சில படங்கள் நடித்துள்ளார் . கடந்த 1986 ஆம் ஆண்டு சிவாஜி புரொடக்ஷன் தயாரிப்பில் உருவான அறுவடை நாள் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ராம்குமார் முதல் முதலாக நடித்தார். இந்த படத்தில் பிரபு மற்றும் பல்லவி நாயகன் நாயகிகளாக நடித்திருப்பார்கள். இந்த படத்தில் ராம்குமார் பாதிரியார் வேடத்தில் நடித்திருப்பார்.
சிவாஜியுடன் நடித்து எம்.ஜி.ஆருடன் நடிக்க ஆசைப்பட்ட 5 நடிகைகள்!
இந்த படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழித்து அவர் மை டியர் மார்த்தாண்டன் என்ற திரைப்படத்தில் நடித்தார். பிரதாப் போத்தன் இயக்கத்தில் சிவாஜி புரொடக்சன் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் ராம்குமார் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.
இதனை அடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு அதாவது கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். இந்த படமும் சிவாஜி புரொடக்ஷன் தயாரிப்பில் உருவானது. அதன் பிறகு பத்து ஆண்டுகள் கழித்து சிவாஜி புரொடக்ஷன் தவிர வேற ஒரு பட நிறுவனத்தில் ராம்குமார் நடித்த முதல் படம் தான் ஐ.
ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் ராம்குமார் நடித்திருப்பார். அதன் பிறகு ஆர்ஜே பாலாஜி நடித்து இயக்கிய எல்கேஜி என்ற திரைப்படத்திலும் ஒரு அரசியல்வாதி கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார். அதேபோல் பூமராங் என்ற படத்தில் ஆகாஷ் என்ற கேரக்டரிலும், கடந்த ஆண்டு வெளியான காரி என்ற திரைப்படத்தில் ராம்குமார் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார்.
’ஜெயிலர்’ கதையில் 50 வருடங்களுக்கு முன்பே நடித்த சிவாஜி கணேசன்.. என்ன படம் தெரியுமா?
சிவாஜி கணேசன் மூத்த மகன் ராம்குமார் மொத்தம் எட்டு படங்களில் மட்டும் தான் நடித்திருக்கிறார். இனிமேலும் அவர் நடிப்பதில் பெரிதாக ஆர்வம் காட்ட மாட்டார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் சிவாஜி புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் பல படங்களை தயாரித்து உள்ளார்.
ராம்குமார் போலவே அவரது மகன்களும் சினிமாவில் நடிப்பதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ராம்குமாரின் மகன் துஷ்யந்த் சக்சஸ், மச்சி மற்றும் தீர்க்கதரிசி ஆகிய படங்களில் மட்டுமே நடித்தார். மேலும் மீன் குழம்பும் மண் பானையும், ஜகஜ்ஜால கில்லாடி ஆகிய படங்களை தயாரித்தார்.
ஒரே நாளில் வெளியான எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர் படங்கள்.. ஆனால் வெற்றி பெற்றதோ ஆதிபராசக்தி..!
அதேபோல் இன்னொரு மகனான சிவாஜி தேவ் என்பவர் சிங்கக்குட்டி, புதுமுகங்கள் தேவை, இதுவும் கடந்து போகும் என்ற மூன்று படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அதன் பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. இவர் தான் நடிகை சுஜா வருணியை திருமணம் செய்து கொண்டவர்.