பேட்டயா…. 2023 பாட்ஷாங்க…. இனி என்ன வேணாலும் செஞ்சி காட்டலாம்னு ஒரு தைரியம் வருது..!

Published:

சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் அதிரிபுதிரி சூப்பர்ஹிட் அடித்து பிளாக்பஸ்டரைத் தக்க வைத்தது. அது மட்டுமல்லாமல் 500 கோடிக்கு மேல் வசூலை அள்ளி முதலிடத்தைப் பிடித்தது. அந்தப்படத்தின் வெற்றி விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசியது

முதல்ல கலாநிதிமாறனுக்குத் தான் நன்றி சொல்லணும். எல்லாருக்கும் நல்ல சாப்பாடு போட்டு கார்லாம் கொடுத்துருக்காங்க. இப்ப தான் அந்தக் கார்ல வந்தேன். இப்ப தான் பணக்காரனா ஆனது மாதிரி இருந்தது. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

Jailer
Jailer

படம் பார்த்த பிறகு கொஞ்சம் ஆவரேஜ்தான்னு தோணுச்சு. அனிருத் இருக்காரு பாருங்க. படத்துக்கு நல்ல அலங்காரம் பண்ணி நிக்க வச்சிட்டாங்க. கார்த்திக் சூப்பர் கேமரா மேன். எடிட்டர் எபெக்ட் சூப்பர். இந்த படம் இவ்ளோ பெரிய ஹிட் ஆனதுக்கு அஞ்சு நாள் தான் சந்தோஷமா இருக்க முடியும்.

அதுக்கு அப்புறமா எப்படி இதுக்கு மேல சூப்பர்ஹிட் படத்தைக் கொடுக்கறதுங்கற பயம் வந்துடும். அடுத்த படம் பண்றதுலாம் ரொம்ப டென்ஷனா இருக்கு. என்ன பண்றதுன்னே தெரில. பர்ஸ்ட் பார்த்தது கலா சார்தான். அனி கேட்டாரு. சார் பேட்ட மாதிரி வருமா? பேட்டயா 2023பாட்ஷாங்கன்னாரு.

அப்புறம் ஆடியோ பங்ஷன்ல மெகா ஹிட். அப்ப தான் கலா சாரப் பார்த்து சொன்னேன். பெரிய ஜோசியரா ஆயிட்டீங்கன்னு. அதனால நெக்ஸ்ட் படத்துக்கு ரொம்ப டென்ஷனா இருக்கு. எனக்கே இவ்ளோ டென்ஷன்னா நெல்சனுக்கு எப்படி இருக்கும்? இது வந்து எல்லாருமே சேர்ந்து பண்ணது. காட்ஸ் கிரேஸ். கலா சார் மாதிரி ஒரு புரொடியூசர். நெல்சன் மாதிரி ஒரு டைரக்டர். டெக்னீஷியன்ஸ் எல்லாம் இருக்கும்போது இனி என்ன வேணாலும் செஞ்சி காட்டலாம்னு ஒரு தைரியம் வருது.

Vinayak
Vinayak

சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால் கூட அழகா எந்த பிராப்ளமும் இல்லாம நடிச்சிக் கொடுத்தாங்க. கேமியோ ரோல் ஆர்டிஸ்ட் எந்த மாதிரி ஆக்ட் பண்ணனும்னு அழகா அவங்கள எப்படி யூஸ் பண்ணனும்னு நெல்சன் சொல்லிக் கொடுத்தாங்க. அவங்களுக்கு நன்றி. ஓடிடில வந்தா கூட தியேட்டர்ல போய் பாருங்க. இது தான் செலபரேஷன்ஸ்.

நெல்சன் வந்து நல்ல காமெடி சென்ஸ். எங்க எப்படி பிடிக்கணும்னு. கப்பார்சிங் 1975ல எப்படி காமிச்சாங்க. எவ்வளவு சென்சேஷனா இருந்தது? அந்த மாதிரி இந்த வர்மா வருவான்னு சொன்னேன். இந்த விநாயக் இங்க வந்தாரு. சூப்பர். சூப்பர். ராவணனால ராமருக்கு மரியாதை. அதே மாதிரி இந்த ஜெயிலருக்கு ரெஸ்பெக்ட் வந்து வர்மா.

 

 

மேலும் உங்களுக்காக...