திருந்தவே மாட்டாரா டிரம்ப்? மறுபடியும் வரிவிதிப்பு.. தடை என எச்சரிக்கை..!

  அமெரிக்காவுக்கு தண்ணீர் கொடுக்கத் தவறிய மெக்சிகோ மீது டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், மெக்சிகோ மீது அதிக வரி மற்றும் தடை விதிப்பேன் என டிரம்ப் மிரட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. அமெரிக்கா மற்றும் மெக்சிகோ…

trump

 

அமெரிக்காவுக்கு தண்ணீர் கொடுக்கத் தவறிய மெக்சிகோ மீது டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், மெக்சிகோ மீது அதிக வரி மற்றும் தடை விதிப்பேன் என டிரம்ப் மிரட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே நீடித்து வரும் தண்ணீர் சர்ச்சை, சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு டெக்சாஸில் உள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகக் கூறிய அமெரிக்கத் தலைவர் டொனால்ட் டிரம்ப், மெக்சிகோ மீது மேலும் வரிவிதிப்பு மற்றும் தேவைபப்ட்டால் தடைகள் விதிக்கப்படும் என வலியுறுத்தியுள்ளார்.

1944ஆம் ஆண்டின் தண்ணீர் ஒப்பந்தப்படி, மெக்சிகோ டெக்சாஸுக்கு 1.3 மில்லியன் ஏக்கர் /அடியில் தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால், அவர்கள் அந்த ஒப்பந்தத்தை மீறுகிறார்கள், இது மிகவும் அநியாயம்!” என டிரம்ப் தனது சமூக ஊடக தளமான Truth Social-இல் கூறியுள்ளார்.

அவர் மேலும், “இந்தத் தவறால் தெற்கு டெக்சாஸ் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்றும், கடந்த ஆண்டு, டெக்சாஸில் இருந்த ஒரே சர்க்கரை ஆலை மூடப்பட்டது என்றும் அதற்கு ஒரே காரணம், விவசாயிகளின் தண்ணீரை மெக்சிகோ திருடுகிறது” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒப்பந்தங்களை மீறாமல், டெக்சாஸை வஞ்சிக்காமல் மெக்சிகோ நேர்மையுடன் தண்ணீர் வழங்கும் வரை, வரிவிதிப்புகள் மற்றும் தடைகள் என பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவோம்!” என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க சர்வதேச எல்லை மற்றும் தண்ணீர் ஆணையத்தின் தரவின்படி, 2020 அக்டோபர் முதல் இன்றுவரை மெக்சிகோ வெறும் 4.89 லட்சம் ஏக்கர்/ அடி மட்டுமே தண்ணீர் வழங்கியுள்ளது. இது ஒப்பந்தத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட 1.75 மில்லியன் ஏக்கர்/ அடிக்கு மிகக் குறைவாகும்.

அமெரிக்க நீர்வளத்துறை கடந்த மாதம் X தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், “இந்த தண்ணீர் குறைபாடு அமெரிக்க விவசாயத்தை பாழாக்குகிறது. குறிப்பாக ரியோ கிராண்டே பள்ளத்தாக்கு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது” என்று எச்சரித்தது. இதன் விளைவாக, அமெரிக்கா, மெக்சிகோவின் கோலராடோ நதிநீரை டிஜுவானா நகருக்கு அனுப்பும் விசேஷக் கால்வாயைப் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்று அறிவித்துள்ளது.

இதற்கு பதிலளித்த மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெயின்பாம், தண்ணீர் குறைபாடு ஏற்ப்பட்டிருப்பதை ஒப்புக்கொண்டாலும், பிராந்தியம் முழுவதும் நிலவும் கடுமையான வறட்சியை காரணம்m என குறிப்பிட்டார்.

தண்ணீர் கிடைக்கும் அளவுக்கு ஏற்ப, மெக்சிகோ ஒப்பந்தத்தின்படி செயல்பட்டு வருகிறது” என X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா விவசாயத்துறையையும், நீர்வளத்துறையையும் உடனடியாக தொடர்பு கொண்டு விளக்கமளிக்க தன்னுடைய நிர்வாகத்துக்கு உத்தரவு வழங்கியிருப்பதாகவும் கூறினார்.மற்ற விஷயங்களைப் போலவே, இந்த விவகாரத்திலும் நல்ல உடன்பாடு உருவாகும் என நம்புகிறேன்” என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.