சிம்ரன் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற முன்னணி நடிகை ஆவார். 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் சிம்ரன். தொடர்ந்து பூச்சூடவா விஐபி போன்ற திரைப்படங்களில் நடித்தார். 1998 ஆம் ஆண்டு துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார் சிம்ரன்.
பின்னர் கண்ணெதிரே தோன்றினாள், அவள் வருவாளா, வாலி, ஜோடி, பிரியமானவளே, பார்த்தேன் ரசித்தேன், பஞ்சதந்திரம், ரமணா, ஆகிய படங்களில் நடித்து 2000 த்தின் ஆரம்ப காலகட்டத்தில் முன்னணி நடிகர்கள் உடன் நடித்து புகழ் பெற்ற அதிக சம்பளம் வாங்கக்கூடிய முன்னணி நடிகையாக திகழ்ந்தார் சிம்ரன்.
2003 ஆம் ஆண்டு தனது நீண்ட கால நண்பனை மணந்து கொண்ட சிம்ரன் அதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். 2010 காலகட்டத்திற்கு பிறகு அவர் நாயகியாக நடிக்கவில்லை. பிறகு வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் இரண்டாம் கட்ட நடிகையாக தனது கேரியரை தொடங்கினார் சிம்ரன்.
தற்போது சசிகுமார் உடன் இணைந்து டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தில் நடித்திருக்கிறார் சிம்ரன். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று இருக்கிறது. இந்நிலையில் அந்தகன் திரைப்படத்தில் நடித்ததற்காக சிம்ரனுக்கு விகடன் விருது கிடைத்திருக்கிறது. அந்த விருது வாங்கிய பிறகு சிம்ரன் மேடையில் பல விஷயங்களை பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியது என்னவென்றால், இன்றைய இளம் இயக்குனர்களுக்கு நான் ஒரே ஒரு கோரிக்கை வைக்கிறேன். அது என்னவென்றால் நிறைய ரியல் உமன் சப்ஜெக்ட்டை எடுத்து படம் பண்ண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று பேசியிருக்கிறார் சிம்ரன்.