திரிஷாவுடன் முத்த காட்சி குறித்து ஓப்பனாக பேசிய சித்தார்த்! அதுக்குன்னு இப்படியா…

Published:

தமிழ் மற்றும் தென்னிந்திய திரையுலகில் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் உலகெங்கிலும் தனக்கென ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.

பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் ரூ. 500 கோடி வசூல் சாதனை படைத்த பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷாவின் குந்தவை கதாபாத்திரத்தை யாரும் மறக்க முடியாது. படம் முழுக்க அழகு சிலையாகவே திரிஷா வளம் வந்திருப்பார்.

தமிழ் திரையுலகில் ஜோடி படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் மூலம் திரையுலகில் கால்பதித்த திரிஷா இன்று அஜித் ,விஜய் ,ரஜினி என பல முன்னனி நடிகர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவரின் தொடக்க காலத்தில் நடித்த பல படங்கள் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மணிரத்னம் எழுதி இயக்கிய 2004 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ஆயுத எழுத்து. இந்த படத்தில் முன்னனி நடிகர்களான சூர்யா , மாதவன் , சித்தார்த் , மீரா ஜாஸ்மின் மற்றும் திரிஷா என பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் சித்தார்த் மற்றும் திரிஷா இடையே ஆனா காதல் காட்சிகள் இளைஞர்கள் மனதை கவர்ந்தது. ஏ ஆர் ரஹ்மான் இசையில் நீ யாரோ நான் யாரோ என்ற பாடல் யாராலும் மறக்க முடியாது. கடற்கரை மணலில் துள்ளி குதித்து ஆட்டம் போடும் காதல் ஜோடியாக சித்தார்த் மற்றும் திரிஷா இந்த பாடலுக்கு நடித்திருப்பார்கள்.

இந்த படத்தில் வரும் திரிஷா உடனான முத்த காட்சிகள் குறித்து சித்தார்த் அவர்களிடம் ஒரு பேட்டியில் கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது அவர் திரிஷா உடன் முத்த காட்சி என அனைவரும் மகிழ வேண்டாம்.

கொளுத்தும் வெயில் கடற்கரை மணலில் இந்த காட்சி படமாக்கப்பட்டதாகவும் , மேலும் அந்த நேரத்தில் அவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் இயக்குனர் மணிரத்தினம் அவர்களிடம் உதவு இயக்குனராக பணிபுரிந்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு போட்டியாக இருந்த கட்டப்பா! சம்பவம் செய்த ரசிகர்கள்! பல சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

மேலும் கடற்கரை காட்சிகளில் எங்கள் இருவரின் முகம் எந்தெந்த விதமாக வைத்தால் படம் பார்ப்பவர்களுக்கு பிடிக்கும் என காட்சிகளை படமாக்க மணிரத்தினம் அவர்கள் சிரமம் பட்டதாகவும் கூறினார்.

அந்த நேரத்தில் ரொமான்ஸ் பண்ணுவதற்கு வாய்ப்பு இல்லை எனவும் வெளிப்படையாக தெரிவித்தார்.

 

மேலும் உங்களுக்காக...