சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு போட்டியாக இருந்த கட்டப்பா! சம்பவம் செய்த ரசிகர்கள்! பல சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் சூப்பர் ஸ்டாராகவும் வளம் வருபவர் ரஜினிகாந்த். தனக்கென உலகெங்கிலும் பல கோடி ரசிகர் பட்டாளத்தை தன் வசம் கொண்ட சிறந்த முன்னணி நடிகர். இதுவரை ரஜினி நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது என்பது காலத்தால் மறக்க முடியாதவையாகும்.

வில்லனாக தனது திரை பயணத்தை தொடங்கிய ரஜினி இன்று சூப்பர் ஸ்டாராக மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். ரஜினி தனக்கென உருவாக்கிய அந்த ஸ்டைல் தான் இன்றளவும் மக்களால் பெரிதும் ரசிக்கப்படுகிறது. 1980 மற்றும் 90களின் தொடக்கத்தில் இருந்தே ரஜினியின் அனைத்து படங்களும் மக்களால் அதிகம் பேசப்பட்டது.

தற்போழுது ரஜினி 169வது படமான ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் திரையுலகில் நடிப்பில் ரஜினிக்கு போட்டியாக நாம் பார்ப்பது கமல் தான். ஆனால் நடிகர் ரஜினிக்கு உண்மையான போட்டியாக இருந்தது வில்லன் நடிகர் சத்யராஜ் அவர்கள் தான். இது குறித்து சுவாரசியமான பல தகவல்கள் இதோ…

பொதுவாக ரஜினி அவர்கள் படப்பிடிப்பு தளங்களில் இருக்கும் பொழுது மிகவும் சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கேலி கிண்டலுடன் இருப்பது வழக்கம். அப்போதெல்லாம் அவர் படங்களில் வில்லனாக நடிக்க நடிகர் சத்யராஜ்க்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டது.

இது எல்லாம் ஒருபுறம் இருக்க ரஜினி, சத்யராஜ் அவர்கள் மோதலுக்கு அடித்தளமாக இருந்த படம் 1986 ஆம் ஆண்டு வெளியான மிஸ்டர் பாரத். இந்த படத்தில் இருவரும் இணைந்து சிறப்பாக நடித்துள்ளனர். சத்யராஜ் அப்பா கதாபாத்திரத்திலும் ரஜினிகாந்த் மகன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த படப்பிடிப்பின் போது முதலில் சில காட்சிகள் படமாக்கப்பட்டது. அதில் சில காட்சிகளை ரஜினி பார்த்து சத்யராஜ் அவர்களின் கதாபாத்திரம் கதையின் ஹீரோ அளவிற்கு இணையாக அமைவதை உணர்ந்து படத்தில் சில காட்சிகளை நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதில் இருவருக்கும் பல மனஸ்தானபங்கள் ஏற்பட தொடங்கியுள்ளது.

அன்று தொடங்கிய போட்டி பல வருடங்களாக தொடர்ந்தபடி உள்ளது. இந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியாகி கோடிகளில் வசூல் சாதனை படைத்த திரைப்படம் சிவாஜி. இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு முதலில் சத்யராஜ் அவர்களுக்குத்தான் கிடைத்தது. ஆனால் அவர் ரஜினி மீது உள்ள அதிருப்தி காரணமாக இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

ஆனால் இந்த செயல் சத்யராஜ் அவர்களுக்கு பல வருடங்கள் கழித்து கஷ்டங்களை கொடுத்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் உலகெங்கிலும் வெளியான திரைப்படம் பாகுபலி . இந்த படத்தில் சத்தியராஜ் அவர்கள் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

ஹீரோவுக்கும் மேலாக இந்த கதாப்பாத்திரம் அனைவரின் மனதையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளியீட்டின் போது ஆந்திராவில் பல பிரச்சனைகள் சத்யராஜ் அவர்களால் நடந்தது. பாகுபலி படம் திரையரங்கில் ஓட வேண்டும் என்றால் சத்யராஜ் அவர்கள் ரஜினியிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய சூழ்நிலை உருவாகியது.

ஒரே நாளில் தலைகீழாக சறுக்கிய நடிகை சதா.. கதறி அழுது இன்ஸ்டாவில் போட்ட வீடியோ..!

சத்யராஜ் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அவர் நடித்த பகுதியை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என ஆந்திராவில் உள்ள ரஜினி ரசிகர்கள் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலி படத்தின் நன்மைக்காக சத்யராஜிடம் பேசி மன்னிப்பு கேட்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பின் படம் வெளியாகி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews