சரத்குமாரின் ரீல் மகளுக்கு அப்படி ஒரு நிலைமையா…. படத்தில் நடித்ததே தவறு என அதிர்ச்சி தகவல்!

Published:

2011 ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ், கோவை சரளா, லட்சுமி ராய் , சரத்குமார் என நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியான தமிழ் திரைப்படம் தான் காஞ்சனா. இது அலற வைக்கும் பேய் படமாக இருந்தாலும், வயிறு குலுங்க சிரிக்க வைத்ததும் காஞ்சனா தான்.

இதற்கு சில ஆண்டுகளுக்கு முன் வந்த முனி திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இது விளம்பரப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் திருநங்கைகளின் வாழ்வியல் மற்றும் இந்த சமூகம் அவர்களுக்கு தரும் இன்னல்களை மையமாக வைத்து காஞ்சனா திரைப்படம் தயாரிக்கப்பட்டது.

மாறுபட்ட கதை காரணமாக இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. இந்த படத்தில் கதையின் ஹீரோவாக சிறப்பாக சரத் குமார் நடித்திருப்பார். உடலமைப்புக்கும், ஆக்ஷனுக்கும் பெயர் பெற்ற நடிகர் சரத்குமார் , படத்தில் திருநங்கை வேடத்தில் இவ்வளவு சிறப்பாக நடிப்பார் என யார் நினைத்திருக்க மாட்டார்கள்.

அந்த அளவிற்கு அவரது நடிப்பு இயல்பாகவும், தத்துரூபமாகவும் அமைந்து இருக்கும். படத்தில் சரத்குமாரின் மகளாக திருநங்கை பிரியா நடித்திருந்தார். இப்படத்தில் காஞ்சனாவாக சரத்குமாரின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திருநங்கை காஞ்சனாவின் மகளாக நடித்த பிரியா, சமீபத்திய பேட்டி ஒன்றில் காஞ்சனா படத்தின் வெற்றிக்கு பிறகு நான் கோடியில் சம்பாதித்து வருவதாக பலர் நினைப்பார்கள். ஆனால் அப்படி இல்லை. என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு என்னவென்றால் அந்த படத்தில் நடித்தது தான்.

படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே நான் சாதாரண திருநங்கை வாழ்க்கையை வாழ்ந்து வந்தேன். ஆனால் இந்த படத்தில் நடித்த பின் எனக்கு வேறு ஒரு படமும் கிடைக்கவில்லை. மேலும் எங்குமே எனக்கு வேலையும் கிடைக்கவில்லை என்று கண்ணீர் மல்க கூறினார்.

நயன்தாராவை விட பிரம்மாண்ட திருமண ஏற்பாடுகள் செய்த விஜய் பட ஹீரோயின்! கடைசியில் என்ன நடந்தது…

மாபெரும் வெற்றி பெற்ற படத்தில் நடித்த திருநங்கைக்கு இப்படி ஒரு நிலைமையா என்று அவரின் கருத்து அனைவரின் பேசு பொருளாக மாறி உள்ளது.

இந்த படத்தில் அவர் நன்றாக படித்து டாக்டராக முன்னேறி மக்களுக்கு சேவை செய்வதாக கதை அமையும், ஆனால் நிஜ வாழ்வில் எந்த உதவியும் இல்லாமல் வாடும் அவரது நிலைமையை கண்ணீருடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...