ஒரே படத்தில் ஜோடியாக நடித்து ஒரே மாதிரி தற்கொலை செய்து கொண்ட நடிகர்-நடிகை.. இரண்டுமே மர்ம மரணங்கள்..!

Published:

ஒரே படத்தில் ஜோடியாக நடித்து ஒரே மாதிரி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நடிகர் மற்றும் நடிகைதான் குணால் மற்றும் மோனல்.

தமிழ் திரை உலகில் ’காதலர் தினம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை குணால். இந்த படத்தில் இடம்பெற்ற ஏஆர் ரகுமானின் சூப்பர் ஹிட் பாடல்கள் மற்றும் கதை அம்சம் ஆகியவை இந்த படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக்கியது.

ஷூட்டிங் வேடிக்கை பார்க்க வந்தவர் நடிகையான அதிசயம்.. ஒரே ஒரு காதலால் ஒட்டுமொத்த சரிவு..!

இதனை அடுத்து அவர் ’பார்வை ஒன்றே போதுமே’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் தான் தமிழில் மோனல் அறிமுகமானார் என்பதும் இவர் நடிகை சிம்ரனின் உடன்பிறந்த தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

kunal

இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் சூப்பர் ஹிட் ஆனது.

இதனை அடுத்து நடிகர் குணால் ’புன்னகை தேசம்’ ’வருஷமெல்லாம் வசந்தம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் சின்ன சின்ன கேரக்டரில் நடித்தார்.

ரஜினி, கமலுக்கே டஃப் கொடுத்த மோகன்.. நடிகையின் துரோகத்தால் ஜீரோவான பரிதாபம்..!

இந்த நிலையில் தான் கடந்த 2008 ஆம் ஆண்டு திடீரென அவர் தனது அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவருடன் ஒரு நடிகை இருந்ததாகவும் அவர்தான் குணால் மரணத்திற்கு காரணம் என்றும் கூறப்பட்டது.

அந்த நடிகை மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த நிலையில் குணால் சாவுக்கு அவர் தான் காரணம் என்பதை போலீசாரால் நிரூபிக்க முடியவில்லை. இதனை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். இன்றுவரை குணால் மரணம் மர்மமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

monal

அதேபோல் இந்த பக்கத்தில் ’பார்வை ஒன்றே போதும்’ என்ற படத்தில் நடித்த மோனல் அதன் பிறகு விஜய்யுடன் ’பத்ரி’ படத்தில் நடித்தார். இந்த படம் அவருக்கு கைகொடுக்கவில்லை. அதன் பின்னர் ஒருசில படங்களில் நடித்தார். இந்த நிலையில் அவர் நடன இயக்குனர் ஒருவரை காதலித்ததாகவும் அந்த காதல் பிரேக்கப் ஆனதால் அவர் மனம் உடைந்ததாகவும் கூறப்பட்டது.

கடந்த 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திடீரென அவர் அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிம்ரன் நடன இயக்குனர் மீது புகார் கொடுத்ததாகவும் ஆனாலும் அந்த புகார் நிரூபிக்கப்படாமல் அவர் விடுதலை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

நயன்தாராவை விட பிரம்மாண்ட திருமண ஏற்பாடுகள் செய்த விஜய் பட ஹீரோயின்! கடைசியில் என்ன நடந்தது…

ஒரே படத்தில் நடித்து ஒரே மாதிரியாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட இருவரது மரணங்களும் இன்று வரை மர்ம மரணங்களாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...