லியோ படம் குறித்து மாஸ் அப்டேட் வெளியிட்ட இயக்குனர்! அதுக்குன்னு இவ்வளோ ஓபனாவா…

Published:

லியோ படத்தில் தனது கதாபாத்திரத்தின் பெயர் இந்த எழுத்தில் தான் துவங்கும் என்றும், விஜய்க்கு நண்பனாகவும், எதிரியாகவும் நடித்துள்ளதாக கூறி படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.

விஜய், திரிஷா, சஞ்சய் தத், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், ஆக்சன் கிங் அர்ஜுன், எஸ் சி சூர்யா, மன்சூர் அலிகான், பிரியா ஆனந், மிஸ்கின் மேலும் பலர் என்று ஒரு மாபெரும் நடிகர் பட்டாளமே லியோ படத்தில் நடித்திருக்கிறது.

சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான நான் ரெடி பாடல் சில சர்ச்சைகளை சந்தித்தாலும் இளைஞர்கள் மத்தியிலும், விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளிவர உள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் நடித்துள்ள இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது கதாபாத்திரம் குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் மற்றும் தன்னுடைய பேவரட் நாயகி த்ரிஷாவுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் த்ரிஷாவுடன் தனக்கு காட்சிகள் இருப்பதாகவும் இது சற்று பெரிய திரைப்படம் என்றும் கூறியுள்ளார்.

சரத்குமாரின் ரீல் மகளுக்கு அப்படி ஒரு நிலைமையா…. படத்தில் நடித்ததே தவறு என அதிர்ச்சி தகவல்!

மேலும் இந்த திரைப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் ஜே என்ற எழுத்தில் துவங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த  படத்திலும் வில்லனா, விஜய்யின் நண்பரா அல்லது வேறு விதமான கதாபாத்திரமா என்ற கேள்விக்கு, இந்த மூன்றும் என்று பதில் அளித்து ரசிகர்களின் ஆர்வத்தை இன்னும் அதிகப்படுத்தி உள்ளார் கௌதம் மேனன்.

 

மேலும் உங்களுக்காக...