ஒரு தடவை முடிவு செஞ்சிட்டேன்னா.. ஏகப்பட்ட கடன்.. வாழ்க்கையே வெறுப்பு.. குகைக்குள் வாழும் இளைஞர்..!

  சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது இளைஞர் ஒருவர், நகர்ப்புற வாழ்க்கையைத் துறந்து, வேலை மற்றும் திருமணம் போன்ற எதுவுமே அர்த்தமற்றது என்று கருதி, கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு குகையில்…

cave

 

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது இளைஞர் ஒருவர், நகர்ப்புற வாழ்க்கையைத் துறந்து, வேலை மற்றும் திருமணம் போன்ற எதுவுமே அர்த்தமற்றது என்று கருதி, கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு குகையில் வாழ்ந்து வருகிறார். இது குறித்து ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் டாக்ஸி ஓட்டுநரான மின் ஹெங்காய் மாதத்திற்கு சுமார் 10,000 யுவான் சம்பாதித்து வந்தார். ஆனால், இடைவிடாத வேலை அவரை சோர்வடையச் செய்ததாக கூறுகிறார். நீண்ட நேரம் வேலை செய்வதும், கடன் அதிகரிப்பதும் அவருக்கு வாழ்க்கையின் அர்த்தம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன. “கடன் அடைப்பதற்காகவே தினமும் 10 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தேன். அது அர்த்தமற்றதாக தோன்றியது,” என்று அவர் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

தனது பழைய வாழ்க்கையை துறக்க முடிவு செய்தபோது, அவருக்கு சுமார் $42,000 கடன் இருந்தது. அவர் கடனைத் திருப்பி செலுத்த முயற்சி செய்வதை நிறுத்தினார். அவரது உறவினர்கள் இறுதியில் அவரது சொத்துக்களை விற்று கடன்களை அடைத்தனர். பின்னர், அருகிலுள்ள ஒரு குகையைப் பயன்படுத்தி கொள்வதற்காக ஒரு கிராமவாசியுடன் நிலத்தை பரிமாறி கொண்டார். தனது $6,000 சேமிப்பை பயன்படுத்தி, அந்த 50 சதுர மீட்டர் குகையை ஒரு எளிமையான வீடாக மாற்றிக்கொண்டார்.

அவர் இப்போது தனது நேரத்தை விவசாயம் செய்வதிலும், நடப்பதிலும், புத்தகம் படிப்பதிலும் செலவிடுகிறார். காலை 8 மணிக்கு எழுந்து தனது நிலத்தில் வேலை செய்து, இரவு 10 மணிக்குள் ஓய்வெடுக்கிறார். பெரும்பாலான உணவை அவரே பயிரிட்டுக் கொள்கிறார், மற்ற செலவுகளுக்காக மிக குறைந்த பணத்தையே பயன்படுத்துகிறார்.

திருமணம் என்பது நேரத்தையும் பணத்தையும் வீணடிப்பது என்று கூறும் மின், காதல் அல்லது பணம் இப்போது எனக்கு தேவையில்லை என்கிறார். காதல், திருமணத்தில் உண்மையான அன்பை கண்டறியும் வாய்ப்பு மிகக் குறைவு. இப்படி ஒன்றுக்காக நான் ஏன் கடினமாக உழைக்க வேண்டும்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நவீன வாழ்க்கையை நிராகரித்த போதிலும், மின் சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்கிறார். தனது குகை வாழ்க்கை குறித்த தகவல்களை 40,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

மீண்டும் அவரை நகரத்திற்கு வர அவரது உறவினர்கள் அழைத்தபோதிலும், ‘ஒரு தடவை முடிவு செஞ்சிட்டேன்னா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்ற விஜய் பாணியில் அவர் வர மறுப்பதாக கூறப்படுகிறது.