ரஜினியின் அந்த 2 மாஸ் சம்பவங்கள்… சிம்பிளா இருக்கணும்னா இவரைப் பார்த்துக் கத்துக்கோங்க…!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது தமிழ்த்திரை உலகின் உச்சநட்சத்திரமாக ஜொலிக்கிறார். அவர் திரையுலகில் அடி எடுத்து வைத்து 50 ஆண்டுகளாகிறது. ஆனால் இன்றும் அதே ஸ்டைல் மாஸ் என தூள்கிளப்பிக் கொண்டு இருக்கிறார். இந்த வயதிலும்…

rajni, director shankar

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது தமிழ்த்திரை உலகின் உச்சநட்சத்திரமாக ஜொலிக்கிறார். அவர் திரையுலகில் அடி எடுத்து வைத்து 50 ஆண்டுகளாகிறது. ஆனால் இன்றும் அதே ஸ்டைல் மாஸ் என தூள்கிளப்பிக் கொண்டு இருக்கிறார். இந்த வயதிலும் கூலி, ஜெயிலர் 2 என வரிசையாகப் படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இவர் எந்தளவு சிம்பிளானவர் என்பதை 2 சம்பவங்கள் மூலம் பார்க்கலாம்.

இயக்குனர் ஷங்கரின் படம் ஒன்றில் ரஜினி நடித்துக் கொண்டு இருந்தாராம். அப்போது 20 நிமிடம் மட்டுமே பிரேக் விட்டாராம் ஷங்கர். அந்த நேரத்தை சாப்பிடுகிறேன் என்று வீணாக்கி அதிக நேரமாக்கி விடக்கூடாது என்று நினைத்தாராம் ரஜினி.

அதனால் தான் நின்று கொண்டு இருந்த தண்டவாளத்தில் இருந்தே வேகம் வேகமாக சாப்பிட்டு முடித்தாராம். இதை இயக்குனர் ஷங்கரே தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. மாஸ் ஹீரோவான ரஜினி நினைத்திருந்தால் தனக்கு சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்க அதிக நேரம் வேண்டும் என கேட்டு இருக்கலாம்.

ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. தன்னால் யாருக்கும் நஷ்டம் வரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அதே போல ரஜினி லிங்கா படத்தில் நடித்துக் கொண்டு இருந்தபோது நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தாராம்.

அப்போது கமலின் போன் கால் வந்ததும் உடனடியாக காலை கீழே இறக்கி விட்டுப் பேச ஆரம்பித்தாராம். அந்தளவுக்கு தனது ஆருயிர் நண்பருக்கு மரியாதைக் கொடுப்பவர் தான் கமல் என்பது இதன்மூலம் தெரிகிறது. சூப்பர்ஸ்டாராகவே இருந்தாலும் இன்னும் சிம்பிளாக இருப்பதுதான் இவரது சிறப்பு. சிவாஜி, எந்திரன், 2.O ஆகிய படங்களை ரஜினிகாந்தை வைத்து ஷங்கர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.