சிவகார்த்திகேயனை நம்பி ஏமாந்து நிற்கும் வெங்கட் பிரபு… அடுத்து என்ன செய்ய போறாரோ…?

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். எந்தவொரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து தனக்கென் தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து அதன்…

sk

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். எந்தவொரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து தனக்கென் தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து அதன் மூலம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கப்பெற்று நடிகர் ஆனவர் சிவகார்த்திகேயன்.

முதலில் காமெடி கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து பிறகு கமர்சியல் படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் சிவகார்த்திகேயன். கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இவரின் அமரன் திரைப்படம் தென் இந்தியா முழுவதும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்த வருடம் சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் நடிப்பில் ஒரு படமும் சுதா கொங்கரா நடிப்பில் ஒரு படமும் வெளியாக இருக்கிறது. தற்போது இவரது பராசக்தி படத்தின் டீசர் வெளியாகி ட்ரெண்டிங் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் வெங்கட் பிரபுவை சிவகார்த்திகேயன் ஏமாற்றி விட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கோட் படம் ரிலீசுக்கு பிறகு வெங்கட் பிரபு ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம் கமிட்மெண்ட் இருக்கிறது சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க போகிறேன் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவை தனிமையில் அழைத்து எனக்கு இப்போ இருக்கும் கமிட்மென்ட்களால் உங்கள் படத்தில் நடிக்க கண்டிப்பாக இரண்டு வருடம் ஆகும் என்று ஒபானக கூறிவிட்டாராம். இதனால் அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் ஏமாற்றத்தில் மனவருத்தத்தில் இருக்கிறாராம் வெங்கட் பிரபு.