இசைஞானி இளையராஜா என்றாலே தமிழ்சினிமாவுல மிகப்பெரிய ஜாம்பவான்னு எல்லாருக்குமே தெரியும். 80ஸ் கிட்ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை இவரது இசை என்றால் அத்தனை பேருக்கும் பிடிக்கிறது. அங்குதான் அவர் ஒரு ராஜாவாக உயர்ந்து நிற்கிறார். அவருக்கு தலைக்கனம் ஜாஸ்தி, திமிர் ஜாஸ்தின்னு பலரும் சொல்றாங்க.
உண்மையிலேயே அவருக்கு அது உண்டான்னு கேட்டா ஒரு சாரர் திறமை உள்ளவரு அவரு. அவருக்கு இருக்குறதுல தப்பே இல்லன்னு சொல்றாங்க. அதே நேரம் இளையராஜாவும் எந்த இசை அமைப்பாளரும் செய்யாத ஒரு சில விஷயத்தைத் தான் செய்துள்ளதாகவும் அதனால் எனக்குத் தான் தலைக்கனம், திமிர் இருக்கும். அதுல என்ன தப்புன்னு கேட்டுள்ளார். இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் ஒரு விஷயத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பாருங்க…
இளையராஜாவுக்கு மிகப்பெரிய ஆற்றலைக் கொடுத்த இறைவன். பண பேராசை அதிகமாகக் கொடுத்துட்டான். அதுதான் ஒரு குறைபாடு. அவர் கெட்ட பேர் எடுக்க காரணம் பேராசை. அவரும் இந்தி, இங்கிலீஷ், கடவுள் பாட்டைக் காப்பி அடிச்சி இசை அமைச்சி இருக்காரு. சொந்த மகனுக்கே காப்பி ரைட் கொடுத்தாரு. அது அவரோட பிறவி குணம் என்கிறார் தயாரிப்பாளர் கே.ராஜன்.
சிம்பொனி இசையை உருவாக்கியவர். இந்த 83வயதிலும் சுறுசுறுப்பாக இசை அமைத்து வருகிறார். ரசிகர்கள் இன்னும் அவரது இசைக்கச்சேரி எங்கு நடந்தாலும் ராகதேவன், இசைஞானி, இசைக்கடவுள்னு எல்லாம் புகழ்ந்து தள்ளுகின்றனர். இப்படி இருக்க தயாரிப்பாளர் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே என்றே பார்க்க வேண்டியுள்ளது.