ஹீரோ அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி! வில்லனாக களமிறங்கும் பிரபலங்கள்!

தமிழ் சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக நடிக்க தொடங்கி அதன்பின் மாஸ் ஹீரோவாக மாறிய நடிகர் தான் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக நடித்து முதலில் வெளியான திரைப்படம் தென்மேற்கு பருவக்காற்று .இந்த படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இதைத்தொடர்ந்து வெளியான பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் விஜய் சேதுபதி.

அதன் பின் நயன்தாராவுடன் நானும் ரவுடிதான், திரிஷாவுடன் 96 போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென பெரிய ரசிகர் கூட்டத்தையே உருவாக்கினார். இவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த மாமனிதன் திரைப்படம் பல விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மாஸ் ஹீரோவாக இருந்த விஜய் சேதுபதி சமீப காலமாக பல படங்களில் வில்லனாக நடித்து கலக்கி வருகிறார். 2012ல் சசிகுமார் தயாரிப்பிலும் நடிப்பிலும் வெளிவந்த திரைப்படம் சுந்தர பாண்டியன் அவர் வில்லனாக நடித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் தெறிக்கவிடும் வில்லனாக நடித்து விஜய்க்கு சரியான டப் கொடுத்திருப்பார். அதைத் தொடர்ந்து கமலின் விக்ரம் படத்தில் எதிர்பாராத கெட்டப்பில் வந்து மாஸ் வில்லனாக நடித்திருப்பார். தமிழை தொடர்ந்து தெலுங்கில் ’உப்பெனா’ படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, கால்ஷீட் பிரச்சினையால் ’புஷ்பா’ படத்தில் நடிக்க முடியவில்லை.

மேலும் பிரபல தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபுவுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் இந்தியில் ஷாரூக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் ஷாரூக்கானுக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி 25 கோடி வாங்கியுள்ளார்.

அடுத்தடுத்து பட படங்களில் வில்லனாக நடித்து வரும் விஜய் சேதுபதி மீண்டும் ஹீரோ அவதாரம் எடுக்க முடிவு செய்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா படத்தில் அவர் மாஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார். குரங்கு பொம்மை எனும் வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.

அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் பாலிவுட் படத்தின் ரீமேகா? மாஸ் அப்டேட் இதோ

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக இரண்டு பிரபலங்கள் நடித்துள்ளனர். பாலிவுட் இயக்குனர், இந்தியாவின் சிறந்த படைப்பாளி என புகழப்படும் அனுராக் காஷ்யப் மற்றும் தனுஷின் கர்ணன் பட வில்லன் நட்டி அவர்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த இரண்டு வில்லன்களும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்பொழுது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்தப் படம் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஹீரோவாக மிகப்பெரிய வெற்றி படமாக அமைய வாய்ப்புள்ளதாக பலர் எதிர்பார்த்து வருகின்றனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...