அஜீத்துக்குப் பாடிய முதல் பாட்டே சூப்பர் ஹிட்.. பாடகருக்கு கணித்துச் சொன்ன வித்யாசாகர்..

Published:

90களின் இறுதியிலும், 2000-ம் ஆண்டின் தொடக்கத்திலும் இசைரசிகர்களைக் பெரிதும் மெலடி பாடல்கள் கவர்ந்திழுத்தது. புதிதுபுதிதாக பல்வேறு பாடகர்கள் வெளிச்சத்திற்கு வரத் துவங்கினர். மேலும் தமிழ் சினிமாவும் தன்னுடைய பழைய ரூட்டிலிருந்து கொஞ்சம் கமர்ஷியல் சினிமாவாக வளர ஆரம்பித்தது.

விஜய், அஜீத், பிரசாந்த் போன்ற நடிகர்கள் உச்சத்திற்கு நிறைய படங்கள் அச்சாரம் போட்டன. அப்போது அவர்களுக்கு பெரிதும் கைகொடுத்தது பாடல்கள் தான். ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், பரத்வாஜ், யுவன்சங்கர்ராஜா போன்ற இசையமைப்பாளர்கள் அடுத்தடுத்து நிறைய ஹிட் ஆல்பங்களைக் கொடுத்தனர். அப்படி இவர்களால் சினிமாவில் பல பாடகர்கள் உருவெடுத்தாலும் குறிப்பிட்ட சிலர் காலம் கடந்தும் பேசும் அளவிற்கு ஹிட் பாடல்களைக் பாடியிருக்கின்றனர்.

அப்படி சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடி இசை ரசிகர்களை முணுமுணுக்க வைத்தவர்தான் ஸ்ரீராம் பார்த்தசாரதி. இவருடைய குரலை ரசிக்க இளங்காற்று வீசுதே பாடல் ஒன்று போதும். இளந்தென்றலாய் ரசிகர்கள் மனதில் என்றென்றும் வீசிக்கொண்டிருக்கும் பிதாமகன் பாடல் இளையராஜா இசையில் இவர் பாடியதே. கர்நாடக சங்கீத இசைப் பாடகரான ஸ்ரீராம் பார்த்த சாரதியை அடையாளம் கண்டு சினிமாத் துறையில் வாய்ப்புக் கொடுத்தவர் இசையமைப்பாளர் வித்யாசாகர்.

அப்போது வித்யாசாகர் அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்து முன்னணியில் இருந்த நேரம். பூவெல்லாம் உன் வாசம் படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருந்த சமயத்தில் ஸ்ரீ ராம் பார்த்த சாரதியின் குரலைக் கேட்டு அவருக்காக ஒரு பாடலைக் கொடுத்திருக்கிறார். முதல் படமே அஜீத்துக்கு பாடும் வாய்ப்பு.

ஊரையே விஜய் ரசிகர்களாக மாற்றிய மாரி செல்வராஜ்.. எல்லாத்துக்கும் காரணமா இருந்தே ஒரே திரைப்படம்..

அதுவும் கலகல டூயட் பாடல். சும்மா விடுவாரா ஸ்ரீராம். வித்யாசாகர் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே புதுமலர் தொட்டுச் செல்லும் காற்றை நிறுத்து.. பாடலை அருமையாகப் பாடி அசத்த அந்தப் பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இந்த இசையை கம்போஸ் செய்யும் போதே வித்யாசாகர் ஸ்ரீராம் பார்த்தசாரதியிடம் முதன் முதலாக நீங்கள் அஜீத்துக்குப் பாடப் போகிறீர்கள். இந்தப் பாடல் உங்களுக்கு நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும் என்று கணித்துக் கூறினாராம்.

அவர் கூறியது போலவே படம் வெளியாகி பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீராம் பார்த்தசாரதி ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்சங்கர்ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அடுத்தடுத்து பல பாடல்களைப் பாடினார். எனினும் இளையராஜா இவரது குரல்வளத்தினை நன்கு பயன்படுத்தி பல பாடல்களை வழங்கினார். குறிப்பாக பிதாமகன் படத்தில் இடம்பெற்ற இளங்காற்று வீசுதே.. ஆனந்த யாழை மீட்டுகிறாய் போன்ற பாடல்கள் இன்றும் இசை ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் ஒரு பாடலாக விளங்குகிறது. இதனைத் தவிர கொஞ்சிப் பேசிட வேண்டாம்.. கஜினி படத்தில் இடம்பெற்ற சுட்டும் விழிச் சுடரே போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல பாடல்களைப் பாடி வருகிறார் ஸ்ரீராம் பார்த்தசாரதி.

மேலும் உங்களுக்காக...