உதயநிதி ஹீரோவானது இப்படித்தான்… அச்சாரம் போட்ட ஆதவன்.. கே.எஸ்.ரவிக்குமார் கொடுத்த ஐடியா

Published:

தற்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் பாரம்பரிய அரசியல் குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் கட்சித் தொண்டர்களைத் தாண்டி அவரை பொதுமக்களிடமும், ரசிகர்களிடமும் சென்று சேர்த்து சினிமா தான். ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் ஹீரோவானவர் தொடர்ந்து முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து கடைசியாக மாமன்னன் வரை வந்து தனது திரையுலகப் பயணத்திற்கு தற்காலிக விடை கொடுத்திருக்கிறார்.

ரெட் ஜெயண்ட் மூவி சினிமா நிறுவனத்தினை ஆரம்பித்து படங்களை வாங்கி விநியோகம் செய்து வந்த உதயநிதி ஸ்டாலின் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான ஆதவன் திரைப்படத்தினை விநியோகம் செய்த பொழுது இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அவரை கேமியோ ரோலில் நடிக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் தனது நடிப்பு வேண்டாம் என்று பிடிவாதம் பிடித்தவரை ஒப்புக் கொள்ள வைத்து கே.எஸ்.ரவிக்குமார் நடிகனாக்கி இருக்கிறார்.

ஆதவன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் பல கண்டிஷன்கள் போட்டு நடித்த உதயநிதி ஸ்டாலினை அத்துடன் சினிமா விட்டு விடவில்லை. அதனைப் பார்த்த பின் சில இயக்குநர்கள் அவரிடம் ஹீரோவாக நடிக்க பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் அவருக்கு விருப்பம் இல்லாமல் இருந்திருக்கிறது.

அஜீத்துக்குப் பாடிய முதல் பாட்டே சூப்பர் ஹிட்.. பாடகருக்கு கணித்துச் சொன்ன வித்யாசாகர்..

இந்நிலையில் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களை இயக்கியிருந்த இயக்குநர் ராஜேஷ்-ன் உதயநிதியை அணுகியிருக்கிறார். ஒகே ஒகே படத்தின் ஒன்லைனைச் சொல்ல அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மேலும் ராஜேஷ் படங்களால் ஏற்கனவே கவரப்பட்ட உதயநிதி இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அப்போது ஹீரோவுக்கு உதயநிதி செட் ஆவாரா என்று பல கோணங்களில் அவரை வைத்து போட்டோ ஷுட் நடத்தியிருக்கிறார்கள். இயக்குநர் ராஜேஷ் மற்றும் அப்போது அவரிடம் உதவியாளராக இருந்த பொன்ராம் ஆகியோர். அனைத்தும் திருப்தியாய் அமைய ஓகே ஓகே படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தில் ஹன்சிகாவுடன் ஆண்ட்ரியாவும் நடித்தாராம். ஆனால் படத்தின் நீளம் கருதி அவரது காட்சிகள் எடிட்டிங்கில் தூக்கப்பட்டிருக்கிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் ஹிட்டாக, சந்தானம் காமெடி கைகொடுக்க, ராஜேஷின் கல கல வசனங்களால் சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக ஒருகல் ஒரு கண்ணாடி திரைப்படம் வெற்றியைப் பதிவு செய்தது. இதனையடுத்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார் உதயநிதி மிஷ்கின் இயக்கிய சைக்கோ, சீனு ராமசாமி இயக்கிய கண்ணே கலைமானே, மாரி செல்வராஜ் இயக்கத்தில் வந்த மாமன்னன் போன்ற படங்கள் உதயநிதியின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படங்களாக அமைந்தது.

மேலும் உங்களுக்காக...