கட்டளைப் பெயர்களில் வந்த தமிழ்சினிமா படங்கள் – ஒரு பார்வை

Published:

தமிழ் இலக்கணத்தில் கட்டளைப் பெயர்கள் என்ற ஒரு வகை உண்டு. இதை ஆங்கிலத்தில் ஆர்டர் போடுவது என்பர். வாடா, போடா, நில்டா, உட்காருடான்னு சொல்ற மாதிரி இருக்கும். அதையே டைட்டிலாகக் கொண்டு வந்த படங்கள் என்னென்னன்னு பார்க்கலாமா…

வாடா

Vaada 2 1
Vaada 2

2005ல் வெளியான படம். சதீஷ் கௌசிக் இயக்கியுள்ளார். இது ஒரு காதல் மற்றும் த்ரில்லர் படம். அர்ஜூன் ராம்பால், அமிஷா பட்டேல், சயீத்கான் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் 2000ல் கே.சுபாஷ் இயக்கத்தில் பார்த்திபன், திவ்யா உன்னி நடிப்பில் வெளியான சபாஷ் படத்தின் ரீமேக்.

2010ல் சுந்தர்.சி., விவேக், ஷெரில் பின்டோ, குஷ்பூ நடித்த படமும் இதே பெயரில் வெளியானது. இந்தப் படத்தின் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்.

குத்து

Kuthu movie 1
Kuthu movie

2004ல் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் வெளியான படம் குத்து. சிம்பு, ரம்யா, ரம்யாகிருஷ்ணன், கருணாஸ், கலாபவன் மணி உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் சூப்பர்ஹிட்.

வாகை சூட வா

2011ல் சற்குணம் இயக்கத்தில் வெளியான படம். காமெடி கலந்த காதல் படம். விமல், இனியா, தஷ்வந்த், பாக்யராஜ், பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது.

ஜிப்ரான் இசையில் பாடல்கள் செம. அழகான கிராமிய படம். செங்கல் சூளையை அழகாகக் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ். வாத்தியாராக வரும் விமல் பசங்களைப் படிக்க வைப்பதற்கு அரும்பாடு படுகிறார். நல்ல தரமான படம்.

நில் கவனி செல்லாதே

Nil Kavani Sellathe
Nil Kavani Sellathe

எப்படிம்மா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க…. மாத்தி மாத்திலாமா நீங்க யோசிக்கிறீங்க. நில் கவனி செல்லுன்னு தான சொல்வாங்க. நீங்க நில் கவனி செல்லாதேன்னு சொல்றீங்களேம்மா… அப்படி என்னம்மா படத்தில இருக்குன்னு கேள்வி கேட்பவர்கள் படத்தைப் பார்க்கலாம்.

ஆனந்த் சக்கரவர்த்தி இயக்கி நடித்த படம். 2010ல் வெளியானது. ஜெகன், லட்சுமி நாயர், தன்சிகா, அழகம்பெருமாள் உள்பட பலர் நடித்துள்ளனர். செல்வ கணேஷ் இசை அமைத்துள்ளார்.முரவார

யோசி

Yosi
Yosi

அபய் சங்கர், ரேவதி வெங்கட், ஊர்வசி, கலாரஞ்சனி, அர்ச்சனா கௌதம், சாம் ஜீவன், அச்சு மாளவிகா, ஏ.எல்.சரண், மயூரன், பாகவ் சூர்யா உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்டீபன் எம்.ஜோசப் இயக்கியுள்ளார். இது இந்த வருடத்தின் ஒரு சாகச த்ரில்லர் படம்.

மேலும் உங்களுக்காக...