திரையரங்குகளைக் கோவிலாக மாற்றிய அம்மன் படங்கள் – ஒரு பார்வை

Published:

ஆடி மாதம் கோவில்களில் மட்டும் அல்ல. திரையரங்குகளிலும் சிறப்பான திருவிழா தான் என்று சொல்வதற்கேற்ப ஒரு காலகட்டத்தில் அம்மன் படங்களாக வந்து திரையரங்கை திருவிழா கோலமாக்கின. அவற்றில் குறிப்பிட்ட சில படங்களைப் பார்ப்போம்.

ஆடி வெள்ளி

Aadivelli
Aadivelli

1990ல் ராமநாராயணன் இயக்கத்தில் nளியான படம். சங்கர் கணேஷின் இசையில் பாடல்கள் சூப்பர். சீதா, நிழல்கள் ரவி உள்பட பலர் நடித்துள்ளனர். அம்மனாக வரும் சீதா பக்தி பரவசமாக நம்மை ஆக்கிவிடுகிறார். படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் சூப்பர்.

சமய புரத்தாளே சாட்சி

SS 1
SS

1985ல் எஸ்.ஜெகதீசன் இயக்கத்தில் வெளியான படம். ராஜேஷ், நளினி, ஜெய்சங்கர், கண்ணன், சக்கரவர்த்தி, பூர்ணம் விஸ்வநாதன், டெல்லி கணேஷ், செந்தாமரை, குமரிமுத்து, ராஜீவ் உள்பட பலர் நடித்துள்ளனர். கே.வி.மகேந்திரன் இசை அமைத்துள்ளார்.

ஆடி விரதம்

Aadi viratham
Aadi viratham

1991ல் ராமநாராயணன் இயக்கத்தில் வெளியான பக்தி படம். ஜீவா ரவி, சித்தாரா, செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். சங்கர் கணேஷ் இசை அமைத்துள்ளார். அந்தக் காலத்தில் தாய்மார்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற படம்.

அம்மன்

Amman movie
Amman movie

கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் 1995ல் வெளியான படம். சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், சுனயனா, ராமிரெட்டி, பாபு மோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ கொம்மினேனி, கே.சக்கரவர்த்தி ஆகியோர் இசை அமைத்துள்ளனர்.

படத்தில் பிரம்மாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள் பார்வையாளர்களின் புருவத்தை உயர்த்தின. அதிக நாள்கள் ஓடிய பக்தி படம் என்றால் அது இதுதான்.

படைவீட்டு அம்மன்

2002ல் வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் புகழ்மணி. மீனா, ராம்கி, தேவயானி, ரவளி, வினுசக்கரவர்த்தி, செந்தில், நிழல்கள் ரவி உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் அம்மனாக மீனா நடித்துள்ளார். தற்போது யூடியூபராக வரும் பயில்வான் ரங்கநாதன் இந்தப் படத்தில் நடித்துள்ளார். எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்துள்ளார்.

மேலும் உங்களுக்காக...