அந்த பெரிய நடிகை மாதிரி வரணும்.. சிறு வயதிலேயே முடிவெடுத்த மும்தாஜ்.. ஆனாலும் வாழ்க்கையில் நடந்த ட்விஸ்ட்..

Published:

டி ராஜேந்தர் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மோனிஷா என் மோனலிசா’. இந்த திரைப்படத்தில் நாயகியாக அறிமுகம் ஆனவர் தான் மும்தாஜ். இவர் மும்பையைச் சேர்ந்தவர். சிறுவயதிலேயே அவர் மும்பையில் பள்ளியில் படிக்கும் போது நடிப்பின் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஸ்ரீதேவியின் வெறித்தனமான ரசிகையாக இருந்த இவர், தனது அறை முழுவதும் ஸ்ரீதேவி புகைப்படத்தை ஒட்டி வைத்திருக்கும் அளவுக்கு நேசமாக இருந்தார்.

இந்த நிலையில் அவருடைய கலை ஆர்வத்தை பார்த்த அவருடைய பெற்றோர்கள் அவருக்கு உதவி செய்தனர். அப்படி இருக்கையில் தான், டி ராஜேந்தர் இயக்கத்தில் உருவான ’மோனிஷா என் மோனாலிசா’ என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகும் வாய்ப்பும் மும்தாஜுக்கு கிடைத்தது. முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்த நிலையில் அதன் பிறகு மலபார் போலீஸ், உனக்காக எல்லாம் உனக்காக உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

mumtaz

விஜய் நடித்த குஷி என்ற திரைப்படத்தில் ஒரு கிளாமர் கேரக்டரில் நடித்திருந்த மும்தாஜ், அந்த படத்தில் இடம் பெற்ற ’கட்டிப்புடி கட்டிப்புடிடா’ என்ற பாடலில் ஆடி இருந்தது இன்றளவிலும் அதிக பிரபலமான ஒன்றாகும். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் பத்மநாபன், லூட்டி, சொன்னால்தான் காதலா, ஸ்டார் போன்ற படங்களில் நடித்தார். ஸ்டார் திரைப்படத்தில் அவர் பிரசாந்துடன் மச்சினியே என்ற பாடலுக்கு செம டான்ஸ் ஆடி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் சாக்லேட், மிட்டா மிராசு, அழகான நாட்கள், ரோஜா கூட்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சாக்லேட் திரைப்படத்தில் இடம் பெற்ற மலமல என்ற பாடல் அன்றைய இளைஞர்களின் மனதை கவர்ந்ததுடன் அந்த பாடலும் மிகப்பெரிய ஹிட்டானது. 2000 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் குறைந்தது. இதனால் சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் அவர் நடனமாடி வந்தார். ஒரு சில படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தும் வந்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு சக்தி சிதம்பரம் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த ’ராஜாதி ராஜா’ என்ற படத்திற்கு பிறகு அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. இருப்பினும் ஒரு சில தெலுங்கு படங்களில் மட்டும் நடித்தார்.

mumtaz1

இந்த நிலையில் தான் தொலைக்காட்சி பக்கம் அவரது கவனம் திரும்பியது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்ற தொடரிலும், கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட சீசன் 6 டான்ஸ் நிகழ்ச்ச்சியிலும் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதில் மும்தாஜ் 91 நாட்கள் தாக்குப்பிடித்து அதிக மக்களின் அன்பை சம்பாதித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நடிகை மும்தாஜ் தற்போது முழுமையாக சினிமாவிலிருந்து விலகி பக்தி மார்க்கத்தில் சென்று விட்டார். மேலும் அவர் மெக்கா சென்று வந்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...