கேப்டன் விஜயகாந்த்துக்கு சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்த இசையமைப்பாளர்… ஊமை விழிகள் முதல் உழவன் மகன் வரை தொடர்ந்த பயணம்!

Published:

கேப்டன் விஜயகாந்த்துக்கு இளையராஜா பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்தாலும், சில பாடல்கள் எப்போது கேட்டாலும் மனதை வருடும். மனதை குடைந்து ஏதோ மாயம் செய்யும் சில பாடல்கள் இளையராஜா இசையில் வரவில்லை. மாறாக இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என்ற பன்முகம் கொண்ட தேன்மொழி ஆபாவாணலால் அறிமுகப்படுத்தபட்டவர்கள் தான் மனோஜ்-கியான் என்ற இரட்டை இசையமைப்பாளர்கள்.

விஸ்நாதன்-ராமமூர்த்தி, சபேஷ்முரளி ஆகிய இரட்டை இசையமைப்பளார்கள் வரிசையில் இணைந்தவர்கள் தான் இந்த மனோஜ்-கியான் இசையமைப்பாளர்கள். இவர்கள் இசையமைத்த முதல் படம் ஊமை விழிகள். விஜயகாந்துக்கு இப்படத்தில் நேரடி பாடல்கள் இல்லையென்றாலும் இப்படத்தில் இடம்பெற்ற தோல்வி நிலையென நினைத்தால் என்ற பாடல் மெஹா ஹிட் பாடல்களில் ஒன்றாக இன்றும் விளங்குகிறது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தன் தேசிய கீதமாக இந்தப் பாடல் ஏற்கப்பட்டது என்றால் இந்தப் பாடலின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம். அப்பேற்பட்ட இந்தப் பாடலுக்கு இசையமைத்தார்கள் இந்த இரட்டையர்கள்.  இந்திப் படங்களில் இசையமைப்பளார்களாக பணிபுரிந்து கொண்டிருந்தவர்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தினார் ஆபாவாணன்.

கார்த்தியை கட்டிப் பிடித்து அழுத சூர்யா… இதான் காரணமா? தம்பியுடையான் படைக்கு அஞ்சான்

அதன் பின் இவர்கள் விஜயகாந்த் நடித்த சில படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்தனர். அவற்றில் குறிப்பிடத்தக்கது உழவன் மகன். இப்படத்தில் இடம்பெறும் செம்மறி ஆடே பாடல் அழகான கிராமத்து மெட்டில் இடம்பெற்று மனதை வருடும். மேலும் உன்னை தினம் தேடும் தலைவன் போன்ற பாடல்களும் ஹிட் ஆகின. அதன்பின் தொடர்ந்து செந்தூரப் பூவே, ஒரு இனிய உதயம் போன்ற படங்களுக்கும் இசையமைத்தார்.

இவர்கள் இணைந்து இசையமைத்த இணைந்த கைககள், சத்திய வாக்கு, தாய்நாடு, வைராக்கியம், வெளிச்சம் போன்ற  திரைப்படப் பாடல்கள் தவிர்க்க முடியா ஹிட் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளன. இணைந்த கைககள் படத்தில் வரும் அந்தி நேரத் தென்றல் காற்று பாடலை எந்தத் தலைமுறை ரசிகர் கேட்டாலும் இதயத்தில் இனம்புரியா ஒரு சோகம் வந்து செல்லும்.

இவ்வாறு தொடரந்து விஜயகாந்த், ராம்கி ஆகியோருக்கு பல ஹிட் பாடல்களைக் கொடுத்த மனோஜ் கியான் இசையமைப்பாளர்கள் பின்னர்பிரிந்து தனித் தனியே இசையமைத்தனர். பல வருட இடைவெளிக்குப் பின் மனோஜ் விஜய் நடித்த என்றென்றும் காதல், பிரசாந்த் நடித்த குட்லக் ஆகிய படங்களை இசைமைத்து இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...