எம்.ஜி.ஆரின் 12 நாட்கள் கால் ஷீட்டில் எடுத்த படம்.. 100 நாட்கள் ஓடி அசத்திய படம்.. அது என்ன தெரியுமா..?

Published:

எம்.ஜி.ஆரை வைத்து அதிக திரைப்படங்களை இயக்கிய பெருமை தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தை சேரும். சிறு வயது முதலே எம்.ஜி.ஆருக்கு சின்னப்ப தேவர் பல உதவிகளை செய்துள்ளார். ஆதலால் நாடகங்களில் நடிக்கும் பொழுதிலிருந்து சின்னப்ப தேவரும் எம்.ஜி.ஆரும் மிக மிக நெருக்கமானவர்கள்.

பிற்காலத்தில் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் கதாநாயகனாக வளர்ந்த பிறகு அவரை வைத்து அதிக படங்களை தயாரித்த ஒரே தயாரிப்பாளர் சின்னப்ப தேவர் மட்டுமே.

இருவரது கூட்டணியிலும் ‘தாய்க்குப்பின் தாரம்’ முதல் ‘நல்ல நேரம்’ வரை சுமார் 16 படங்கள் உருவாகியுள்ளன. அதில் ஒரு படத்தை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நடிப்பில் உருவான ‘முகராசி’ திரைப்படம் தான். மேலும் எம்.ஜி.ஆர் உடன் முதன்முதலாக ஜெமினி கணேசன் இணைந்து நடித்த திரைப்படம் இது. அப்பொழுது எம்.ஜி.ஆர் திரை உலகில் வளர்ந்த முன்னணி நடிகர் மட்டுமின்றி அரசியலிலும் பிஸியாக பயணித்துக் கொண்டிருந்தார்.

அதனால் முகராசி படத்திற்கு எம்.ஜி.ஆர் வெறும் 12 நாட்கள் மட்டுமே கால் ஷீட்டாக கொடுத்துள்ளார். பொதுவாக சின்னப்ப தேவர் மற்றும் எம்.ஜி.ஆர் கூட்டணியில் உருவாகும் அனைத்து படங்களும் குறைந்த நாட்களில் குறைந்த பொருள் செலவில் உருவாகும். அதிலும் முகராசி படம் இருப்பதிலேயே மிகவும் குறைந்த நாட்களில் எடுக்கப்பட்ட படம் ஆகும்.

ஆனால் படம் வெளியாகி 100 நாட்கள் ஓடியது. தேவர், எம்.ஜி.ஆர் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஓரிரு திரைப்படங்களைத் தவிர மற்ற அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. மேலும் ஒரு திரைப்படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதில் திட்டமிட்டு எடுத்தாலே படம் பாதி வெற்றி தான். அதை சரியாகப் புரிந்து கொண்டவர்களே வெற்றி காண்கிறார்கள்.

மேலும் உங்களுக்காக...