ஹீரோக்கள் வாய் பேச முடியாமல் நடித்த படங்களின் லிஸ்ட் இதோ!

Published:

ஒரு திரைப்படத்தின் வெற்றியின் பெரும் பகுதி அதில் நடித்த ஹீரோவை மையப்படுத்தி அமைகிறது. ஹீரோக்கள் செய்யும் அதிரடியான ஆக்சன் காட்சிகள், அசத்தலான நடனம், மாஸான பஞ்ச் டயலாக்குகள் இதற்காகவே பல படங்கள் திரையரங்குகளில் வருடக் கணக்கில் ஓடியுள்ளது.

ரஜினி,கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என பல முன்னணி ஹீரோக்கள் நடித்தால் போதும் அந்தப் படம் எப்போதுமே மாஸ் ஹிட் தான். சில நேரங்களில் இந்த ஹீரோக்கள் மற்ற படங்களில் கேமியோ ரோலில் வந்தால் கூட அந்த படமும் சூப்பர் ஹிட் அடித்து விடும். அந்த அளவிற்கு முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் தனித்தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு தனி சிறப்பு இருக்கும். அந்த வகையில் படத்திற்கு படம் ரஜினி அவர்கள் கூறும் பஞ்ச் டயலாக்குகளுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி விடுவார்கள். அதை போல் விஜய்யின் முதல் சிங்கிள் பாடலை ரசிக்காத ரசிகர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு படங்களில் ஹீரோக்களின் வசனத்திற்கும், ஆட்டத்திற்கும் ரசிகர்கள் அடிமை தான்.

படங்களில் பொதுவாக ஹீரோக்கள் வில்லனிடம் ஒரு சில நேரம் அடி வாங்கினாலும் அடுத்து ஹீரோக்கள் அதிரடியாக செய்யும் ஆக்சன் காட்சிகளுக்கு திரையரங்கு அதிரும் அளவு கைதட்டல் அதிகமாக இருக்கும். ஆக்சன் காட்சியின் போது ஹீரோக்கள் பேசும் ஒவ்வொரு வசனமும் காலத்தால் அசைக்க முடியாத வசனங்களாக மாறி உள்ளது.

இப்படி தனது ஆக்சன் காட்சியிலும், சிறந்த வசன உச்சரிப்பாலும், பஞ்ச் டயலாக்குகளிலும் ரசிகர்களை கவர்ந்து வந்த நடிகர்கள் ஒரு சில படங்களில் வாய் பேச முடியதவராக நடித்து வந்துள்ளனர். அப்படி வித்தியாசமான கதைக்களம் கொண்டு முன்னணி ஹீரோக்கள் நடித்த தமிழ் சினிமாக்களின் லிஸ்ட்டை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் பார்க்கும் திரைப்படம் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த சொல்லாமலே. இந்த படத்தில் ஹீரோவாக லிவிங்ஸ்டன் நடித்திருப்பார். ஹீரோயின் ஆக கௌசல்யா நடித்திருப்பார். இந்த படத்தில் ஹீரோயின் கௌசல்யா மீது கொண்ட காதல் காரணமாக ஹீரோ லிவிங்ஸ்டன் வாய் பேச முடியாதவராக நடித்திருப்பார்.

அடுத்த திரைப்படம் 1999 ஆம் ஆண்டு வெளியான வாலி திரைப்படம். எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் நடிகர் அஜித் இந்த திரைப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதில் ஒரு கதாபாத்திரத்தில் அவர் வாய் பேச முடியாதவராக நடித்திருப்பார்.

அடுத்ததாக 2002 ஆம் ஆண்டு வெளிவந்த என் மன வானில் திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடித்த ஹீரோ மற்றும் ஹீரோயின் இருவரும் வாய் பேச முடியாதவர்களாக நடித்திருப்பார்கள்.

சிவாஜியின் நடிப்பை பார்த்து மிரண்டு போன பிரம்மாண்ட ஹிந்தி நடிகர்!

நான்காவதாக நாம் பார்க்கும் திரைப்படம் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த பங்காளி திரைப்படம் இந்த திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் அவர்கள் வாய் பேச முடியாதவராக நடித்திருப்பார்.

ஐந்தாவதாக நாம் பார்க்கும் திரைப்படம் பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் திரைப்படம். இந்த படத்தில் சூர்யா, லைலா, விக்ரம் என பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருப்பார்கள். இந்த படம் முழுக்க விக்ரம் பேசாதவராக நடித்திருப்பார்.

ஆறாவதாக நாம் பார்க்கும் திரைப்படம் நன்றி. அர்ஜுன் மற்றும் கார்த்திக் இந்த படத்தில் இணைந்து நடித்திருப்பார்கள். இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அர்ஜுன் அறிமுகமாகியுள்ளார். ஆனால் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே அர்ஜுன் வாய் பேச முடியாதவராக நடித்திருப்பார்.

மேலும் உங்களுக்காக...