தயாரிப்பாளரால் டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்திற்கு ஏற்பட்ட மன வருத்தம்.. ஒரே போன்காலில் எம்.ஜி.ஆர் செஞ்சது தான் மாஸ்..!

Published:

எக்காலத்துக்கும் தலைசிறந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவர்களுள் ஒருவர் எம்.ஜி.ஆர். திரைத்துறை பொறுத்த வரையில் நாடக நடிகராக சினிமாவில் நுழைந்து ஆரம்ப காலங்களில் துணை வேடங்களில் நடித்து படிப்படியாக கதாநாயகனாக உருவெடுத்தார். சினிமாவில் கோலோச்சியதற்க்கான காரணம் தன் திரைப்படங்களில் இவர் செய்த புதுமையே. பொதுவாக எம்.ஜி.ஆர் திரைப்படம் என்றால் தாய் பாசத்திற்கும் சண்டைக் காட்சிகளுக்கும் பஞ்சம் இருக்காது இதுவே இவருக்கான தனி ரசிகர் பட்டாளம் உருவாவதற்கான முக்கிய காரணமாகும்.

கூடுதலாக எப்பொழுதும் அவரின் படங்களில் வரும் பாடலின் வாயிலாக கருத்துக்களை சொல்லவும் தயங்கியதே இல்லை. பொது வாழ்க்கையும் சரி திரை வாழ்க்கையிலும் சரி அவரால் வாழ்ந்த குடும்பங்கள் பல. தேடிப் போயும் உதவுவார் தேடி வந்திருக்கும் உதவி செய்ய என்றைக்குமே தயங்கியதில்லை. எம்.ஜி.ஆர் தனது படப்பிடிப்பு தளத்தில் சுற்றி இருக்கும் அனைவரையும் கவனிப்பது வழக்கம்.

mgr

உடன் நடிக்கும் சக நடிகர்களோ அல்லது தொழில்நுட்ப கலைஞர்களோ அது யாராக இருந்தாலும் அவர்களின் முகமாற்றத்தை கண்ட உடனே அதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு தீர்த்து வைப்பார். அப்படித்தான் எம்.ஜி.ஆர் உடன் படப்பிடிப்பு தளத்தில் நடனம் அமைத்துக் கொண்டிருக்கும் பொழுது மாஸ்டர் சுதந்திரத்திற்கும் முகம் வாடி இருப்பதைக் கண்டார்.

அவரை தனியாக அழைத்து விவரத்தை கேட்டறிந்தார். அப்பொழுது, “மைசூரில் ஐந்து நாட்களாக எடுக்கப்பட்ட பாடலுக்கு தயாரிப்பாளர் இன்னும் எனக்கு சம்பள பணத்தை தரவில்லை. அதனால் என்னுடைய குடும்ப செலவுகளை என்னால் சமாளிக்க முடியவில்லை” என்று கூறினார். உடனே எம்.ஜி.ஆர் அன்று படப்பிடிப்பு இடைவெளியின் போது சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

sundharam

உடனே அந்த தயாரிப்பாளரும் மறுநாள் தன்னுடைய உதவியாளர் மூலம் சுந்தரத்துக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்து அனுப்பினார். அதன் மூலம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த சுந்தரம் எம்.ஜி.ஆருக்கு நன்றியை தெரிவித்தார். அதனால்தான் என் குடும்பத்தின் செலவை என்னால் அன்று சமாளிக்க முடிந்தது என்று சுந்தரம் பேட்டி ஒன்றில் இவ்வாறு நடந்த சம்பவத்தை கூறியிருந்தார்.

மேலும் உங்களுக்காக...