அந்தப் படம் ரிலீஸ் அப்போ திட்டாத ஆளே கிடையாது.. உண்மை உடைத்த விக்னேஷ் சிவன்!

Published:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் முக்கியமானவர் விக்னேஷ் சிவன். பலராலும் அறியப்பட்ட இயக்குனராக இருந்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஒரு பதிப்பை பதிக்க நீண்ட காலமாக போராடி வருகிறார். அவர் இயக்கிய முதல் படமான போடா போடி திரைப்படம் ஓரளவுக்கு மக்கள் மத்தியில் சென்று வெற்றி கொடுத்தாலும் அவரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது ‘நானும் ரவுடி தான்’ திரைப்படம் தான். அப்படத்திற்குப் பிறகு அவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய வெற்றி எதுவும் அமையவில்லை.

சூர்யாவுடன் இணைந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படமும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியான ‘காத்துவாக்ல ரெண்டு காதல்’ படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. தோல்வியே வெற்றிக்கு அடித்தளம் என்பது போல அடுத்ததாக அஜித்தை வைத்து படம் இயக்கப் போகிறார் என்று பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் கடைசியில் அதுவும் கைகூடாமல் போனது.

vignesh shivan

கடைசியாக ‘லவ் டுடே’ படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதனை வைத்து அந்தப் படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் மற்றும் நடிகர் சித்ரா லக்ஷ்மன் உடன் நடந்த நேர்காணல் ஒன்றில் தன்னுடைய முந்தய படத்தினை பற்றிய இதுவரை வெளிவராத தகவலை பகிர்ந்துள்ளார்.

அதைப் பற்றி மேலும் விக்னேஷ் சிவன் கூறியதாவது, கதை எழுதும்போது எப்பொழுதும் நான் ஹீரோக்காக எதையும் மாற்றம் செய்ய மாட்டேன். என்னுடைய கதையை அப்படியே படமாக நினைப்பேன் போடா போடி படம் ஓரளவுக்கு வெற்றி எனக்கு கொடுத்தாலும் நானும் ரௌடி தான் படத்திற்கு நான் கதை சொல்லாத ஹீரோவே கிடையாது. எல்லோரும் கிளைமேக்ஸ் மாற்ற சொன்னார்கள் நான் மாட்ட மாட்டேன் என்று சொன்னதால் எவரும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. என்னுடைய கதையில் இறுதியாக விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டார். அப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு வரை அதன் ப்ரீவியூ ஷோவை பார்த்துவிட்டு காரித்துப்பாத ஆளே கிடையாது.

chitra lakshmanan - vignesh shivan

அதையும் தாண்டி படம் ரிலீஸ் ஆனது அன்று முதல் மக்கள் கொடுத்த ஆதரவினால் மட்டுமே அப்படம் வெற்றி பெற்றதாக அந்த நேர்காணலில் கூறியிருந்தார். விக்னேஷ் சிவனுக்கு ஹீரோ எவ்வளவு பெரிய ஆளா ஆளாக இருந்தாலும் பரவாயில்லை அதற்காக தன்னுடைய கதையில் எந்தவித மாற்றத்தையும் செய்ய விரும்பாத மனுஷன் என்று இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

மேலும் உங்களுக்காக...