எம்ஜிஆர் – தேவிகா இணைந்து நடித்த ஒரே படம்.. எம்ஜிஆர் – கமல் இணைந்து நடித்த ஒரே படமும் இதுதான்..!

Published:

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உடன் நடிகை தேவிகா பல படங்கள் நடித்திருந்தாலும் எம்ஜிஆர் உடன் அவர் நடித்தது ஒரே ஒரு திரைப்படம்தான். எம்ஜிஆர் உடன் அதன் பிறகு அவர் இணைந்து நடிக்காததற்கு காரணம் எதுவும் தெரியவில்லை என்றாலும் எம்ஜிஆர் உடன் ஏன் நடிக்கவில்லை என்பது கடைசி வரை ஒரு புதிராகவே இருந்தது.

எம்ஜிஆர், தேவிகா, எம்ஆர் ராதா, அசோகன் உள்பட பலர் நடிப்பில் உருவான ‘ஆனந்த ஜோதி’ என்ற திரைப்படம் கடந்த 1963ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக கமல்ஹாசன் நடித்திருப்பார். இந்த படத்தை பிரபல வில்லன் நடிகர் பிஎஸ் வீரப்பா தயாரித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை அள்ளி குவித்தது.

எம்ஜிஆர் – ஜெயலலிதா நடிக்க இருந்த படம்.. திடீரென ரஜினி – அம்பிகா நடிக்கும் படமாக மாறியது எப்படி?

இந்த படத்தின் கதைப்படி எம்ஜிஆர் ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருவார். அதே பள்ளியில்தான் தேவிகாவின் சகோதரரான கமல்ஹாசன் படித்து வருவார். இந்த நிலையில் தேவிகாவை எம்ஜிஆர் காதலிப்பார், தேவிகாவும் எம்ஜிஆரை காதலிப்பார்.

இந்த நிலையில் எம்ஜிஆர் வீட்டிற்கு கொள்ளை கூட்டத்திலிருந்து தப்பித்த ஒருவர் தஞ்சம் புகுந்து பாதுகாப்பு கேட்பார். அப்போது கொள்ளை கூட்டத்தினர் வந்து அந்த நபரை கொன்று விட்டு மாயமாகிவிடுவார்கள். அந்த கொலைப்பழி எம்ஜிஆர் மீது விழுந்து விடும்.

 

anandha jothi

இதனை அடுத்து போலீஸிடம் சிக்காமல் தலைமறைவு வாழ்க்கை வாழும் எம்ஜிஆர் உண்மையான கொலையாளி யார் என்பதை கண்டுபிடித்து தன்னை நிரபராதி என்று நிருபித்து கொள்வது தான் இந்த படத்தின் கதையாக இருந்தது.

பாதியில் நின்ற சிவாஜி படம்.. எம்ஜிஆர் படத்தை எடுத்து அதில் கிடைத்த லாபத்தில் மீண்டும் தொடக்கம்..

இந்த படத்திற்கு விஸ்வநாதன் – ராமமூர்த்தி என்ற இரட்டையர்கள் இசையமைத்திருந்தார்கள். இந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. குறிப்பாக ‘நினைக்கத் தெரிந்த மனமே உன்னை மறக்க தெரியாதா’, ‘ஒரு தாய் மக்கள்’, ‘பனி இல்லாத மார்கழியா’, ‘பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து’ ஆகிய பாடல்கள் இன்றும் பிரபலமாக உள்ளது.

இந்த படம் வெளியாகி 60 வருடங்களான போதிலும் எம்ஜிஆர் தேவிகா நடித்த ஒரே படம் என்ற காரணத்தால் இன்றும் பலர் ரசித்து பார்ப்பார்கள். மேலும் இந்த படத்தின் கதை பின்னாளில் பல படங்களுக்கு இன்ஸ்பிரஷனாக அமைந்தது.

பட்ஜெட்டை விட 800 மடங்கு லாபம்.. எம்ஜிஆர் இயக்கிய முதல் திரைப்படம்..! என்ன படம் தெரியுமா?

தமிழில் வெற்றி பெற்றதால் இந்த படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட்டனர். அங்கும் இந்த படம் நல்ல வசூலை வாரி குவித்தது.

மேலும் உங்களுக்காக...