வெறும் 500 ரூபாய் சம்பளத்திற்கு நடித்த விஜய்! தெறிக்க விடும் அப்டேட்!

Published:

தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் கொண்டுள்ள விஜய் தற்பொழுது தனது 67வது படமான லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

லோகேஷ் இயக்கத்தில் பான் இந்திய படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். படத்தில் விஜய்க்கு கோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் இருந்து நா ரெடி என்னும் முதல் பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் அடுத்தடுத்த அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளது.

மேலும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை வெளிநாடுகளில் நடத்த படக்குழு முயற்சித்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக வெங்கட்பிரபுவுடன் இணைந்து விஜய் 68 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு யுவன் இசையமைக்க உள்ளார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் விஜய் 68 இந்த படத்தில் விஜய்க்கு 200 கோடி சம்பளம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாகவே விஜய்யின் படங்கள் பாக்ஸ் ஆபிசில் கோடிக்கணக்கில் சாதனை படைத்து வருவதால் விஜய்க்கு இந்த சம்பளம் வழங்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கமலுக்கு கோபம் வந்தால் என்ன செய்வார் என்று தெரியுமா? கௌதமிக்கு மட்டும் தெரிந்த இரகசியம்!

இந்நிலையில் விஜய் ஆரம்ப காலத்தில் ஒரு படத்திற்க்கு 500 ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது விஜய் முன்னணி மாஸ் ஹீரோவாக வலம் வந்தாலும் அவருடைய தொடக்க காலத்தில் இயல்பான நடிகராக தான் முதலில் படங்களில் நடிக்க தொடங்கினார்.

அப்படி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றி படத்தில் 10 வயது சிறுவன் கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார். எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், விஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடித்ததற்கு விஜய்க்கு 500 ரூபாய் சம்பளம் வழங்கியதாக கூறப்படுகிறது.

 

மேலும் உங்களுக்காக...