இந்தக் கதை கார்த்திக்கு எழுதினது இல்லை..! மனம் திறந்த பிரபல இயக்குனர்..?

Published:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் கார்த்தி. வெற்றிக்காக நீண்ட நாட்களாக போராடிக் கொண்டிருக்கும் சமயத்தில் கடைசியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது இவரது வழக்கம். அப்படிபட்ட படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். அடுத்ததாக வரவுள்ள ஜப்பான் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமணமே வேண்டாம் என்று இருந்த மாதவி.. சாமியார் கை காட்டியவரை திடீரென திருமணம் செய்த அதிசயம்..!

karthi

அதனைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் கைதி-2 என படங்கள் வரிசை கட்டி உள்ளன. மாஸ் ஹீரோவாக தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டு வருகிறார். இருந்த போதிலும் ஆரம்ப காலத்தில் முழு நீள காமெடி படம் ஒன்றில் நடித்து குடும்ப ரசிகர்களை சேகரித்தார். அது 2013 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான “ஆல் இன் ஆல் அழகுராஜா” என்னும் திரைப்படம் தான்.

 

ராஜேஷ் முழு நீள காமெடி திரைப்படங்களை இயக்குவதில் வல்லவர். அவரின் அப்போதைய சிவா மனசுல சக்தி மற்றும் பாஸ் என்ற பாஸ்கரன் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தன.

18 வயதில் கொடிகட்டி பறந்த நடிகை திவ்யபாரதி.. 19 வயதில் மர்ம மரணம்.. என்ன நடந்தது?

அதனைத் தொடர்ந்து காமெடி திரைப்படங்களை மட்டுமே எடுத்து வந்தார். பாஸ் என்ற பாஸ்கரன் திரைப்படத்தை அடுத்து கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தில் பணியாற்றினார். இப்படம் இயக்குனர் ராஜேஷுக்கே உரித்தான பாணியில் முழு நீள காமெடி படமாக அமைந்திருந்தாலும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

karthi

அதற்கு ராஜேஷ் “முதலில் கார்த்திக்கு வேறு ஒரு கதையை வைத்திருந்தேன் அது எஸ்.எம்.எஸ் போன்ற கதை களம் கொண்டதாக இருந்தது. அந்த காலகட்டத்தில் கார்த்தி மாஸ் ஹீரோவாக வளர்ந்து கொண்டிருந்தார் காரணம் அதுக்கு முந்தைய படமான சிறுத்தை மற்றும் அலெக்ஸ் பாண்டியன் போன்ற படங்கள் ஆக்சன் படங்களாக உருவாகின. இதன் காரணமாக கார்த்திக்கு சாதாரண கதையை செய்து விடக்கூடாது என்று கதைகளத்தில் மாறுபாடு செய்து அதுவும் குறிப்பாக 80-களில் கதை நடப்பது போல் மாற்றம் செய்யப்பட்டது. முதலில் அவருக்கு கூறிய கதையே வேறு” என பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.

m rajesh

ராஜேஷ் ‘விக்டிம்’ என்னும் வெப் சீரியஸை இயக்கியுள்ளார். அதனை தொடர்ந்து ஜெயம் ரவியின் 30வது திரைப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

16 வயதில் ஹீரோயின், 17 வயதில் திருமணம்.. 18வது வயதில் தற்கொலை.. என்ன நடந்தது நடிகை ஷோபா வாழ்வில்..?

மேலும் உங்களுக்காக...