திருமணமே வேண்டாம் என்று இருந்த மாதவி.. சாமியார் கை காட்டியவரை திடீரென திருமணம் செய்த அதிசயம்..!

நடிகை மாதவி தனது வாழ்வில் திருமணம் செய்ய வேண்டாம் என்று இருந்ததாகவும் ஆனால் திடீரென 33 வயதில் தனது ஆன்மீக குரு ஒருவர் கை காட்டியவரை திருமணம் செய்து கொண்டதாகவும் அதன் பிறகு அவரது வாழ்க்கை நிம்மதியாக சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி என இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக கடந்த 80களில் இருந்தவர் நடிகை மாதவி. தமிழில் இவர் 1980 ஆம் ஆண்டு அறிமுகமானாலும் பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ’தில்லுமுல்லு’ திரைப்படம் தான் அவருக்கு திருப்புமுனையை கொடுத்தது. அந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அவர் நடிப்பில் கலக்கி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

madhavi 2

அதன் பின் ரஜினி ஜோடியாக ’கர்ஜனை’ கமல் ஜோடியாக ’ராஜபார்வை’, ’டிக் டிக்’, ’எல்லாம் இன்பமயம்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார். மேலும் கமல்ஹாசனின் ’சட்டம்’ ரஜினியின் ’தம்பிக்கு எந்த ஊரு’ மீண்டும் கமல்ஹாசனுடன் ’காக்கி சட்டை’, ’மங்கம்மா சபதம்’ மீண்டும் ரஜினியுடன் ’விடுதலை’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி ஏராளமான தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

16 வயதில் ஹீரோயின், 17 வயதில் திருமணம்.. 18வது வயதில் தற்கொலை.. என்ன நடந்தது நடிகை ஷோபா வாழ்வில்..?

நடிகை மாதவி ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாட்டுடன் இருப்பார். குறிப்பாக அவர் தனது ஆன்மீக குருவான சுவாமி ராமா என்பவர் மீது அதீத பக்தி வைத்திருந்தார் என்பதும் அவர் என்ன சொன்னாலும் கேட்கும் நிலையில் இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

madhavi

இந்த நிலையில் சுவாமி ராமா என்பவரின் சீடர்களில் ஒருவர் தொழிலதிபர் ரால் சர்மா. இவரை மாதவியுடன் சுவாமி ராமா அறிமுகம் செய்ததாகவும் அதன் பிறகு இருவரும் நட்பாக பழகி பின்னர் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

18 வயதில் திருமணம்.. 5 ஆண்டுகளில் விவாகரத்து.. 3 குழந்தைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த சுலக்சனா..!

திருமணமே வேண்டாம் என்று இருந்த மாதவி திருமணம் செய்வதற்கு அவரது ஆன்மீக குரு சுவாமி ராமா என்பவர் ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின் அமெரிக்காவில்  செட்டிலாகிவிட்ட  மாதவிக்கு 3 மகள்கள் உள்ளனர். அவ்வப்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் மகள்களின் புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.

திருமணத்திற்கு பின் சில படங்களில் நடித்தாலும் சில வருடங்களில் அவர் முழுமையாக திரையுலகில் இருந்து விலகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரை உலகில் கமல், ரஜினி உடன் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்த மாதவிக்கு தற்போது கூட சில வாய்ப்புகள் வந்தாலும் அவர் விடாப்படியாக நடிக்க முடியாது என்று கூறி விட்டார் என்றும் கூறப்படுகிறது.

வடிவேலு செய்த சூழ்ச்சி.. கடைசி வரை திருமணம் செய்யாத கோவை சரளா.. கேள்விப்படாத தகவல்கள்..!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...